Sep 29, 2026 - 03:25 PM

கீல்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, புத்தம்புதியது என்பது பல்பொருள் அங்காடியில் விற்பனைக்காக வந்தடையும் பொருட்களைத் தாண்டிய ஒரு அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இது கடந்த 35 ஆண்டுகளாக, அன்றாட அனுபவங்களை மேம்படுத்துதல், சமூகங்களை வலுப்படுத்துதல் மற்றும் தனது பயணத்துடன் தொடர்புடைய மக்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.
கீல்ஸ் தனது 150 வது விற்பனை மையத்தை அமைத்து ஒரு முக்கியமான சாதனை மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அதன் பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது, புத்தம்புதியது என்பது வெறும் விற்பனைப் பொருட்களைத் தாண்டி, மக்களை ஆதரித்தல், சமூகங்களை வலுப்படுத்துதல் மற்றும் சிறந்த அன்றாட அனுபவங்களை உருவாக்குதல் ஆகியவற்றிலும் வெளிப்படுவதைக் காண முடிகிறது. விவசாயிகள் மற்றும் ஊழியர்களை வலுப்படுத்துவது முதல் குடும்பங்களுக்குப் புத்தம்புதிய தெரிவுகளை வழங்குவது வரை, புத்தம்புதியவை, வசதி, நம்பிக்கை மற்றும் அக்கறை ஆகியவற்றின் மூலம் இந்த நம்பிக்கையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி, நாட்டின் வாழ்க்கைத் தரத்தை கீல்ஸ் மேம்படுத்தி வருகிறது. இது ஒரு புதிய வாக்குறுதி அல்ல. மாறாக, ஆரம்பத்திலிருந்தே கீல்ஸ் நிறுவனத்தை வழிநடத்தி வரும் ஒரு தூரநோக்குக் கொண்ட இலட்சியமாகும்.
1991 ல் கொழும்பின் லிபேர்ட்டி பிளாசாவில் தனது முதல் விற்பனை மையத்தைத் திறந்ததிலிருந்து, மாறிவரும் நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்ப கீல்ஸ் தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. பாரம்பரிய சில்லறை வர்த்தகத்தைத் தாண்டி, வாடிக்கையாளர்கள், விவசாயிகள், விநியோகஸ்தர்கள், ஊழியர்கள் மற்றும் சமூகங்களை ஆதரிக்கும் வகையிலான ஒரு ஒருங்கிணைந்த சூழல் அமைப்பை அது உருவாக்கியுள்ளது. இன்று, இலங்கை முழுவதும் 150 விற்பனை மையங்களுடன், நாட்டின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் தனது நோக்கத்தை இந்த வர்த்தகநாமம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
வாடிக்கையாளர்களுக்கு, இந்தப் பயணம் கீல்ஸ் தொடர்ந்து உருவாக்கும் அன்றாடத் தெரிவுகள் மற்றும் அனுபவங்களில் பிரதிபலிக்கிறது. பண்ணையிலிருந்து நேரடியாக வரும் புதிய விளைபொருட்கள் மற்றும் சமைத்த உணவு வகைகள் முதல், விரிவடைந்து வரும் பலதரப்பட்ட தயாரிப்புகள், புதிய உணவு அனுபவங்கள் மற்றும் கீல்ஸ் நெக்ஸஸ் செயலி (Keells Nexus App) போன்ற டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் வரை, இலங்கைக் குடும்பங்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப இந்த வர்த்தகநாமம் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொள்கிறது. நெக்ஸஸ் சூழலமைப்பு இப்போது 2.9 மில்லியன் அங்கத்தவர்களுடன் இணைந்துள்ளது. இது பொருத்தமான விளம்பரங்கள், தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகள் மற்றும் பிரத்தியேக வெகுமதிகள் மூலம், மேலும் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் எளிதில் அணுகக்கூடிய பன்முக வழிகொண்ட அனுபவத்தை வழங்குகிறது.
புதிய விளைபொருட்களைப் பெறுவதைத் தாண்டி, விவசாயச் சூழலமைப்பை வலுப்படுத்துவதிலும் கீல்ஸ் தொடர்ந்து முதலீடு செய்கிறது. பெண் விவசாய தொழில்முனைவோர் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிதி அறிவு, காலநிலை மாற்றத்தைத் தாக்குபிடிக்கக்கூடிய விவசாயம், இயற்கை விவசாயம் மற்றும் நிலைபேற்றியல் சார்ந்த விவசாயம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாதிரிப் பண்ணைகள் மற்றும் புதிய விவசாயத் தொழில்நுட்பங்கள், விவசாயிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் இழப்புகளைக் குறைக்கவும் உதவுகின்றன.
புத்தம்புதியவற்றை வழங்கும் கீல்ஸின் பயணத்தில் அதைச் சாத்தியமாக்கும் விவசாயிகளே மையமாக உள்ளனர். 10 சேகரிப்பு மையங்களில் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றி, கீல்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள விவசாய சமூகங்களை நுகர்வோருடன் இணைக்கும் ஒரு நேரடி கொள்முதல் வலையமைப்பை உருவாக்கியுள்ளது. கொவி திரிய போன்ற முன்னெடுப்புகள் மூலம், விவசாயிகள் பருவநிலை மாற்றங்களின் போது தாக்குப்பிடிக்கக்கூடிய விவசாயம், நிலைபேற்றியல் சார்ந்த விவசாயம் மற்றும் சிறந்த விவசாய நடைமுறைகள் (Good Agricultural Practices - GAP) சான்றிதழ் ஆகியவற்றில் ஆதரவைப் பெறுகின்றனர். அத்துடன், எல் நினோ போன்ற சவால்களுக்குத் தயாராவதற்கான விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பெறுகின்றனர்.
6,500-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட இந்நிறுவனம், பயிற்சி, தொழில்சார் மேம்பாடு மற்றும் நல்வாழ்வுத் திட்டங்கள் மூலம் தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. NAITA சான்றிதழ் போன்ற கூட்டாண்மைகள் மூலம், ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்ட திறன்களை வளர்த்துக்கொள்ளவும் தங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேறவும் கீல்ஸ் உதவுகிறது. இதனுடன் இணைந்து, ஊழியர்களின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் பல முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன் உதாரணமாக, She Rises மூலம் பெண்களுக்கான தலைமைத்துவ மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சி, Peace Pod மூலம் மன மற்றும் சமூக நல்வாழ்வுக்கான ஆதரவு, மற்றும் Financial Wellbeing Programme மூலம் தனிப்பட்ட நிதி நிர்வாகம் குறித்த நடைமுறை வழிகாட்டுதல் ஆகியவை இதில் அடங்கும்.
இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பு அதன் விற்பனை மையங்களைத் தாண்டி, அது சேவையாற்றும் பரந்த சமூகங்களையும் சென்றடைகிறது. முன்பள்ளி உணவுத் திட்டங்கள், உணவு மீள்விநியோக முயற்சிகள் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற முன்னெடுப்புகள் மூலம், கீல்ஸ் தொடர்ந்து கூட்டு மதிப்பை உருவாக்கி வருகிறது. முன்பள்ளி உணவுத் திட்டத்தின் மூலம் 116 முன்பள்ளிகளைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 538,000-க்கும் அதிகமான வேளை உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளையில், John Keells Foundation மற்றும் The Rainbow Institute ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட Skill Into Progress (SKIP)) திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 10 இடங்களில் 1,322 மாணவர்களுக்கு கீல்ஸ் ஆதரவளித்துள்ளது. இதில் 280 பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர், மேலும் இத்திட்டம் எதிர்காலத்தில் இன்னும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.
எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில், மக்களை ஆதரித்தல், சமூகங்களை வலுப்படுத்துதல் மற்றும் சிறந்த அன்றாட அனுபவங்களை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் கட்டமைக்கப்பட்ட தனது தூரநோக்குடனான இலட்சியத்தை கீல்ஸ் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. இப்போது, தாங்கள் செய்யும் சிறிய விடயங்களில் புத்தம்புதியவற்றைக் கண்டறியவும், புதிய சாத்தியக்கூறுகளைக் கண்டறியவும், அன்றாட வாழ்க்கையைச் சற்று மேம்படுத்திக்கொள்ளவும் இலங்கையர்களை ஊக்குவிப்பதை கீல்ஸ் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏனெனில், வாழ்க்கையைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பது என்பது நாம் வீட்டிற்குக் கொண்டுவரும் பொருட்களைப் பற்றியது மட்டுமல்ல. அது நாம் உருவாக்கும் வாய்ப்புகள், வலுப்படுத்தும் சமூகங்கள், இணைந்து கட்டியெழுப்பும் சிறப்பான எதிர்காலம் மற்றும் அனைவரும் புத்தம்புதிய முறையில் வாழ நாம் அளிக்கும் ஊக்கம் ஆகியவற்றைப் பற்றியது.































