Sep 30, 2026 - 10:33 AM

இரத்தினபுரி, பெல்மடுல்ல, லெல்லுபிட்டிய தோட்டத்தின் பெரண்டுவ பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 06 லயன் அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
30 அறைகளைக் கொண்ட லயன் குடியிருப்பின் மீது பாரிய அரச மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததையடுத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதனால் குறித்த லயன் குடியிருப்பில் வசித்து வந்த பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று (29) நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்த அவர், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தற்போதைய தேவைகள் மற்றும் குடியிருப்பு நிலைமைகள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.































