Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
2026 கொழும்பு புத்தகக் கண்காட்சி: BookTok வாசகர்களுக்கான எளிய வழிகாட்டி

Sep 30, 2026 - 01:55 PM

2026 கொழும்பு புத்தகக் கண்காட்சி: BookTok வாசகர்களுக்கான எளிய வழிகாட்டி
Mobitel Inner 1278

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி மீண்டும் வந்துவிட்டது. உங்கள் செலவுகளை ஒரு வழியாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டீர்கள் என்று நினைக்கும்போதே, இந்த அமைதியான வாக்குறுதியைத் தகர்க்கும் வகையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை புத்தகத் திருவிழா அரங்கேறுகிறது. ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு மத்தியில் உலா வரும்போது, நான் சும்மா பார்த்துவிட்டுத்தான் போகப்போகிறேன். என்று எந்தவொரு புத்தகக் காதலனும் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் வாக்குறுதி எவ்வளவு ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 

ஏற்கனவே படித்து முடிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் மலைபோல் குவிந்திருக்க, புக்டொக் (BookTok) சமூக வலைத்தளம் நமது அடுத்த வாசிப்பு ஆசையைத் தூண்டிவிடுகிறது. TikTok இல் 85 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகளுடன் உலகளாவிய வாசகர்களைக் கவர்ந்துள்ள இந்தத் தளம், இதை நிச்சயமாகப் படியுங்கள், உங்களுக்குப் பிடிக்கும் என்று யாரோ ஒரு புதியவர் சொல்லும் ஒரே ஒரு காணொளி மூலம் நமது வாசிப்புப் பட்டியலில் அரை டஜன் புத்தகங்களை உடனடியாகச் சேர்த்துவிடக் கூடியது. எனவே, இந்த ஆண்டு கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் நமது பணத்தையும், மன அமைதியையும் இழக்காமல் தப்பிக்க, ஷிர்லிஸ்டிக்கிள் (Shirlisticle) என்ற பிரபல புக்டொக் படைப்பாளரான ஷிர்லினிடம் சில பயனுள்ள ஆலோசனைகளைப் பெற்றோம். புத்தகக் கண்காட்சியை எவ்வாறு திறம்பட எதிர்கொள்வது, புத்தகங்களின் கவர்ச்சியில் வீழாமல் கையிலுள்ள பணத்தை எவ்வாறு பராமரிப்பது என்பதற்கான வழிகாட்டலை அவர் பகிர்ந்துகொள்கிறார். 

புத்தகக் கண்காட்சியைச் சுமுகமாக எதிர்கொள்ள அவர் வழங்கும் முதல் விதி: கண்காட்சிக்குக் காலையிலேயே சென்றுவிடுங்கள். அதிலும் குறிப்பாக முதல் நாளிலேயே, கூட்ட நெரிசல் தொடங்குவதற்கு முன் காலை 9 மணிக்கெல்லாம் அங்கு இருப்பது சிறந்தது. நுழைவுச்சீட்டை இணையவழியில் முன்பதிவு செய்து கொள்வது நேரத்தை மிச்சப்படுத்தும். உள்ளே நுழைந்ததும் அவசரப்பட்டுப் பணத்தை வழங்கிவிடாமல், முதல் இரண்டு மணி நேரத்தை வௌ;வேறு அரங்குகளைப் பார்வையிடவும், விலைகளை ஒப்பிடவும், சலுகைகளைச் சரிபார்க்கவும் செலவிட வேண்டும். 

ஜெயா புக் சென்டர், மக்கீன் புக்ஸ், குட்ரீட்ஸ் லங்கா (Jeya Book Center, Makeen Books, GoodReads) போன்ற Stalls-கள் உங்கள் பட்டியலில் முதன்மையாக இருக்கலாம். அதேபோல, வழக்கமாகப் புதிய புத்தகங்களை மட்டுமே வாங்கும் பழக்கம் உள்ளவர்களும் பழைய புத்தகங்கள் விற்கும் பகுதியைத் தவறவிடக் கூடாது. அங்கு மிகச் சிறந்த நிலையில் உள்ள புத்தகங்களைக் குறைந்த விலையிலும், பல நல்ல தொகுப்புச் சலுகைகளிலும் பெற முடியும். புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் முன் முறையான திட்டமிடல் அவசியம். வாங்குவதற்கு விருப்பமான புத்தகங்களின் பட்டியல் மற்றும் கையிலுள்ள பணத்தை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள். 

அதேநேரம், எதிர்பாராத நல்ல புத்தகங்கள் கிடைக்கும்போது வாங்கச் சிறிய இடத்தையும் விட்டுவையுங்கள். நீண்ட நேரம் நடக்க வேண்டியிருக்கும் என்பதால், குடிநீர், சாதாரண சிற்றுண்டி, சௌகரியமான காலணிகள் மற்றும் சுமந்து செல்லத் தேவையான பை ஆகியவற்றை மறக்காமல் கொண்டு செல்லுங்கள். வாசிப்புப் பட்டியலைத் தயாரிக்கும்போது, உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற புக்டொக் விமர்சகர்களைப் பின்பற்றுங்கள். பொதுவான பரிந்துரைகளைத் தாண்டி fantasy, thriller, mystery, sci-fi போன்ற குறிப்பிட்ட பிரிவுகளைத் தேடிப் பாருங்கள். பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்ற புத்தகங்களை மட்டுமே பார்க்காமல், சிறிய அளவிலான விமர்சகர்களின் நேர்மையான மதிப்பாய்வுகளையும் கவனித்தால் மறைக்கப்பட்ட சிறந்த நூல்களைக் கண்டறிய முடியும். 

வாங்குவதற்கான பட்டியலை இரண்டு பிரிவுகளாகப் பிரியுங்கள்: ஒன்று, கண்டிப்பாக வாங்க வேண்டியவை; மற்றொன்று, கிடைத்தால் பார்க்கலாம் என்ற வகையில் அமையும் சாத்தியக்கூறு பட்டியல். வழக்கமான பாணியைத் தாண்டி, மனித உணர்வுகளையும் அன்றாட வாழ்க்கையின் எளிய தருணங்களையும் பேசும் கதைகளையும் வாசிக்க முயற்சி செய்யலாம். இலங்கையில் தற்போதுள்ள புத்தகங்களின் விலையைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே பட்ஜெட்டை நிர்ணயித்து அதைக் கடைப்பிடிக்க முயலுங்கள். சில புத்தகக் கடைகள் வழங்கும் தவணைமுறைச் செலுத்தல் (Buy now, Pay later) வசதிகளையும் அறிந்துகொள்வது நல்லது. 

கண்காட்சியின் போது நினைவில் கொள்ள வேண்டிய மூன்று முக்கிய விதிகள் உள்ளன. முதலாவதாக, உங்களின் தொலைபேசியை முழுமையாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுங்கள்; கையடக்க சார்ஜர் (Power Bank) கொண்டு செல்வது சிறந்தது. ஏனெனில், அதுவே உங்களின் புத்தகப் பட்டியல், விலை ஒப்பிட்டுப் பார்க்கும் கருவி மற்றும் கட்டணச் செயலியாகச் செயல்படுகிறது. இரண்டாவதாக, மூன்று stall-கள் விதி (Three-stall rule) - ஒரு புத்தகம் பிடித்திருந்தால் உடனடியாக வாங்காமல், குறைந்தபட்சம் மூன்று அரங்குகளிலாவது அதன் விலை மற்றும் சலுகைகளை ஒப்பிட்டுப் பார்த்த பின் தீர்மானியுங்கள். மூன்றாவதாக, பசியோடு உலாவர வேண்டாம். பசி உங்களைச் சோர்வடையச் செய்து தவறான முடிவுகளை எடுக்க வைக்கும். 

புத்தகக் கண்காட்சி என்பது நாம் திட்டமிட்ட பாதையிலிருந்து விலகி புதிய அனுபவங்களைப் பெறுவதற்கான ஒரு களம். ஒரு புத்தகத்தைத் தேடிச் சென்று ஐந்து புத்தகங்களோடு வரலாம், அல்லது புதிய இலக்கிய வகையைக் கண்டறியலாம். எனவே திட்டமிடலோடு செல்லுங்கள், ஆனால் எதிர்பாராத ஆச்சரியங்களுக்கும் கதவுகளுக்கேற்ப கதைகளைத் தேர்ந்தெடுக்க உங்கள் பணப்பையையும் சற்றுத் தயார்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

Mobitel 1278