Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
வந்தாறுமூலையில் பெண்கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!

Oct 1, 2026 - 05:20 PM

வந்தாறுமூலையில் பெண்கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!
Mobitel Inner 1278

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெதுப்பக உரிமையாளரின் மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று (01) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். 

செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பாலுதாஸ் பாலதாசன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி, வந்தாறுமூலை பகுதியிலுள்ள வெதுப்பக உரிமையாளரான கிருஷ்ணபிள்ளை குமாரசாமியின் வீட்டுடன் அமைந்திருந்த வெதுப்பகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேகநபர், அங்கு தனிமையில் இருந்த அவரது மனைவியான நாகமுத்து பிரேமாவதி என்பவரை கொலை செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரால் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கில் அரச தரப்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி. தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதாடி வந்தனர். 

வழக்கு விசாரணைகளின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, வெதுப்பகத்துக்குள் அத்துமீறி நுழைந்த முதலாவது குற்றத்திற்காக ஒரு வருட கடுழிய சிறைத்தண்டனையும், கொலை செய்த இரண்டாவது குற்றத்திற்காக மரண தண்டனையும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

MOST READ

காணொளி
அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

Mobitel 1278