Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
சூரிய சக்தி பிரதிநிதிகளின் பிரச்சினைகளை முன்வைத்து பிரான்ஸ் தூதுவரைச் சந்தித்த சஜித்

Oct 2, 2026 - 11:27 AM

சூரிய சக்தி பிரதிநிதிகளின் பிரச்சினைகளை முன்வைத்து பிரான்ஸ் தூதுவரைச் சந்தித்த சஜித்
Mobitel Inner 1278

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அத்துறையில் முதலீடுகளை விரிவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைகான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Rémi Lambert) மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையின் உள்நாட்டுப் பிரதிநிதிகள் குழுவினரை இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தார். 

இச்சந்திப்பில் பிரான்ஸ் தூதரகத்தின் பொருளாதார ஆலோசகர் எம். பிலிப் பவுட் (M. Philippe Foute), அரசியல் அதிகாரிகளான அனா பெலர்க் (Anna Bellerq), தினுஷா இலேபெரும மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையின் பங்குதாரர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

இக்கலந்துரையாடலின் போது, 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மின்சார உற்பத்தியில் 70 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யும் இலக்கு உட்பட, இலங்கையின் தேசிய புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி இலக்குகளை அடைவதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு சுட்டிக்காட்டினார். 

அரச கொள்கையின்படி 'Net Metering' மற்றும் 'Net Accounting' முறையிலிருந்து 'Net-Plus' திட்டத்திற்கு மாறுவது உட்பட, நாட்டில் கூரைமேல் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி தகடுகளுக்கான கட்டணங்கள் மற்றும் கணக்கீட்டு பொறிமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இத்துறையில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும், இம்மாற்றங்கள் சூரிய சக்தி தொழில்முனைவோருக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதால் அத்துறையின் முதலீடுகளின் சாத்தியக்கூறுகளைப் பாதித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் சுட்டிக்காட்டினார். 

சூரிய சக்தியுடன் தொடர்புடைய அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் இத்துறை எதிர்கொள்ளும் ஏனைய ஒழுங்குமுறைத் தடைகள் குறித்தும் அவதானம் செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர், புதுப்பிக்கத்தக்க சக்தி முதலீடுகளுக்கு முன்னறிவிக்கக்கூடிய நிலையான சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். 

பிரான்சின் அபிவிருத்தி முகவர் நிலையமான AFD ஊடாக இலங்கை அரசினால் முன்னுரிமை அளிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் முக்கிய பங்காற்ற முடியும் என்றும், பிரான்ஸ் முதலீட்டாளர்களுக்கும் இலங்கை புதுப்பிக்கத்தக்க சக்தி தொழில்முனைவோருக்கும் இடையே அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரான்ஸ் தூதுவரிடம் சுட்டிக்காட்டினார். 

வெளிநாட்டு முதலீடுகளை கவருவதில் நிலையான மின்சாரக் கட்டணங்கள் மற்றும் முன்னறிவிக்கக்கூடிய கொள்கைச் சூழலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், இலங்கைக்கு தொடர்ச்சியான, உயர்தரமான மற்றும் மலிவு விலையிலான மின்சாரம் தேவை என்றும் குறிப்பிட்டார். 

சூரிய சக்தித் துறையின் விரிவாக்கமானது இலங்கை இளைஞர்களுக்குத் தொழில்முனைவில் ஈடுபடவும், புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் தொழில் முயற்சிகளை உருவாக்கவும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் முழுமையாகப் புதுப்பிக்கத்தக்க சக்தியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பை நோக்கி நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட இலங்கையின் பரந்த புதுப்பிக்கத்தக்க சக்தி அபிலாஷைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் தனது கருத்துக்களை முன்வைத்தார். 

அத்துடன், புதுப்பிக்கத்தக்க சக்தியை ஊக்குவிப்பது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாக அமைந்து காணப்பட வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தி இலக்குகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அரசாங்கம், முதலீட்டாளர்கள், தொழில்முறை பங்குதாரர்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்தி பங்காளிகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்பு அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து கேட்டுக்கொண்டார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

Mobitel 1278