Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
கிழக்கு
ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிவிட்டு திரும்பிய ஆசிரியை விபத்தில் பலி!

Oct 6, 2026 - 06:35 PM

ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிவிட்டு திரும்பிய ஆசிரியை விபத்தில் பலி!
Mobitel Inner 1278

மட்டக்களப்பு - திமிலைதீவு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், பாடசாலை அதிபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் இன்று (6) பிற்பகல் 1:30 அளவில் திமிலைதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. 

மட்டக்களப்பு நகர் சூரியா வீதியைச் சேர்ந்த வலையிறவு தமிழ் கலவன் பாடசாலையில் பணியாற்றிவந்த 58 வயதுடைய ஆசிரியை ஒருவரே உயிரிழந்தவராவார். 

பாடசாலையில் ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தை நிறைவு செய்துவிட்டு அதிபரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்தபோதே, பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

விபத்தினை அடுத்து கனரக வாகனத்தின் சாரதி வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடியதால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டதில் பெரும் பதற்றம் நிலவியது. 

சம்பவ இடத்துக்கு விரைந்த மட்டக்களப்பு தலைமையகப் போக்குவரத்து பொலிஸார் கனரக வாகனத்தைக் கைப்பற்றி நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். 

மட்டக்களப்பு நீதவானின் உத்தரவிற்கமைய சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தப்பிச் சென்ற சாரதியைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

Mobitel 1278