Nov 25, 2026 - 09:30 AM

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் மூன்றாம் நாள் அமர்வு இன்று (25) நடைபெறுகின்றது.
இதற்கமைய, இன்றைய பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய விவாதத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தொடர்பில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
2027 வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழு நிலை விவாதம் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
அதன் நேரலையை இங்கே காணலாம்,

































