Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
கிழக்கு
கட்டிடச் சுவர் இடிந்து விழுந்து இரு பிள்ளைகளின் தந்தை பலி!

Oct 7, 2026 - 10:17 AM

கட்டிடச் சுவர் இடிந்து விழுந்து இரு பிள்ளைகளின் தந்தை பலி!
Mobitel Inner 1278

மட்டக்களப்பு, சந்திவெளி பிரதேசத்தில் வீடு ஒன்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கட்டிடச் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (06) காலை 8:00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகச் சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

கிண்ணியடி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய கட்டிட தொழிலாளியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

சந்திவெளி பிரதான வீதியை அண்மித்த பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடு ஒன்றுக்குச் சம்பவ தினமான நேற்று காலை இரு கட்டிட தொழிலாளர்கள் கொன்கிரீட் வார்த்தவதற்காகப் பலகை (சட்டிங்) அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதன்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். 

இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் அருகிலுள்ள சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கிண்ணியடியைச் சேர்ந்த 48 வயதுடைய தொழிலாளி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். 

படுகாயமடைந்த மற்றொருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

Mobitel 1278