Oct 19, 2026 - 09:33 AM -
0

இன்று (19) சந்திர பகவான் மகரம் ராசியின் உத்திராடம் பின் திருவோணம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று மரண யோகம் உள்ள தினத்தில் ரிஷப ராசியை சேர்ந்த, மிருகசீரிஷம் பின் திருவாதிரை நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் முன்னேற்றம், நண்பர்களின் ஆதரவு, கிடைப்பதால் மகிழ்ச்சி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய காதல் விஷயங்களில் மகிழ்ச்சியான சூழல் உதவும். தொழில் வாழ்க்கையிலும், பணியிடத்திலும் உங்களுக்கு வரக்கூடிய புதிய வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள். பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கவும். நிதி பாதுகாப்பை உறுதி செய்த முதலீடு செய்யவும். திருமண வாழ்க்கையில் இனக்கம் நிறைந்த நாளாக இருக்கும்.பணம் தொடர்பான வாக்குகளை நிறைவேற்ற சிரமங்கள் சந்திக்க நேரிடும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பணம் வரவு அதிகரிக்கும், நிலுவையில் இருந்த பணம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இன்று உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். சேமிப்பு மற்றும் நிதி இலக்குகளை மதிப்பாய்வு செய்து உங்கள் முதலீடுகளை செய்யவும். தேவையற்ற செலவுகள் உங்களை தொடர வாய்ப்பு உண்டு. வேலை தொடர்பாக நெறிமுறைகளையும், பொறுப்புகளையும் உணர்ந்து செயல்படவும். வேலை, தொழில் தொடர்பாக புதிய பயிற்சிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடிய நாள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கும். குடும்பத்தில் சில மனக்கசப்புகள் ஏற்பட்டு விலகும். கடினமான பணிகளை கையாள வேண்டிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கக்கூடிய சிக்கல்கள், நிதி விஷயங்களை தீர்க்க வேண்டியது இருக்கும். இன்று உங்கள் பேச்சில் நிதானம் மற்றும் தெளிவை கடைபிடிக்கவும். உங்கள் செயல்களில் அதிக ஆற்றல், ஊக்கத்தை உணர்வீர்கள். சேமிப்பிற்கான புதிய வழிகளை கண்டறிவீர்கள். இன்றைய தினம் நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் போட்டிகள் குறையக்கூடிய நாள். காதல் விஷயத்தில் ஏதேனும் சிக்கல்கள் நீடிக்கும். உங்கள் உறவுகளை வளப்படுத்துவதற்கு நிதானமான பேச்சு மற்றும் துணை உணர்வுகளை புரிந்து செயல்படவும். உங்களுடைய ஆரோக்கியம் சீராக இருக்கும். அதே சமயம் உணவு சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் செலவுகளை மிகவும் கவனமாக செய்யவும். இன்று அவசரமாக ஏதேனும் பொருட்கள் வாங்குவது அல்லது முடிவெடுப்பதை தவிர்க்கவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மரியாதை, வாய்ப்புகள், விருதுகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உங்கள் வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உறவுகள் வலுவடையக்கூடிய நாள். தொழில் வாழ்க்கையில் உற்சாகம் நிறைந்திருக்கும். உங்களுடைய நிதிநிலை சீராகும். நிம்மதி கிடைக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய வழக்கமான செலவுகளை மதிப்பாய்வு செய்ய வேண்டிய நாள்.இன்று பகட்டிற்காக கூடுதல் செலவுகள் செய்வதை தவிர்க்கவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகத்தில் நல்ல சூழ்நிலை, பதவி உயர்வுக்கான நல்ல வாய்ப்புகளும், செலவுகளை கட்டுப்படுத்தக்கூடிய நாளாக அமையும். உங்களின் நிதி நிலைமை அன்றாட வழக்கத்தையும் மேம்படுத்த உதவும். உங்களின் பொழுதுபோக்குகள் தொடர்பான விஷயங்களுக்கும் மற்றும் குடும்ப தேவைகளுக்கான செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இன்று புதிய வருமான வழிகளை ஆராயவும். உங்களுடைய சிந்தனை மற்றும் செயல்பாடு சிறப்பாக இருக்கும். எந்த ஒரு விவாதத்திற்கும் தயாராக இருப்பீர்கள்.உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் சாதகமான பலன், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். காதல் வாழ்க்கையில் மற்றும் பணியிடத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பதில் சற்று குழப்பம் அடைய செய்யும். யோசிக்காமல் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும். இன்று தேவையற்ற செலவுகள் ஒத்தி வைக்க வேண்டிய நாள். இன்று உங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் நிறைவேற வாய்ப்புகள் உண்டு. புதனின் அமைப்பு உங்களுடைய பொறுப்புக்களை தெளிவாக உணர்த்தும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று இன்று வழக்கு விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆன்மீகம், தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். நிதி சார்ந்த முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. இன்று உங்களுடைய கருத்துக்களை மிகவும் தெளிவாக எடுத்து வைக்கவும். தேவையற்ற அலுவலக பேச்சுகளில் இருந்து விலகி இருக்கவும். உங்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும், வேலையில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரவு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சுக்கிரனின் பெயர்ச்சியின் நிதி ஆதாயத்தை தரக்கூடியதாக இருக்கும். உங்களுடைய பெரிய நிதி சிக்கல்கள் இன்று தீர வாய்ப்புகள் உண்டு. காதல் உறவினில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இன்று உங்கள் வேலை தொடர்பாக சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் பணத்தை விவேகத்துடன் கையாள வேண்டிய நாள். ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய ராசியில் சந்திரன் இருப்பதால் மன உறுதி அதிகரிக்கும். தொழில் வேலைகள் முன்னேற்றம் ஏற்படக்கூடியதாக அமையும். அன்றாட மறக்கமான வேலைகளை வேகமாக முடிக்க முடியும். இன்று காதல் உறவில் சிறிய சிக்கல்கள் தோன்றினாலும் அவற்றை அலட்சியப்படுத்தாமல் சரி செய்ய முயலவும். கடின உழைப்புகள் கவனம் செலுத்தவும். இதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உங்களுடைய குடும்ப பொறுப்புக்களை பொறுப்பேற்று செய்து முடிப்பீர்கள். சேமிப்பு அதிகரிக்கலாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும், கடன் தொல்லை குறையும். அவசர முடிவுகள் எடுப்பதற்கு பதிலாக, புதிய திட்டங்களை தீட்டுவதற்கு நேரம் ஒதுக்கவும். இன்று உங்களுடைய பயணங்கள் அல்லது கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கலாம். இன்று முழுமையான தகவல் பெறாத நிலையில் எந்த ஒரு முதலீடுகளையும் செய்ய வேண்டாம். உங்கள் தொழில், வேலை தொடர்பான முக்கிய விஷயங்களை பரிசீலனை செய்யவும். உங்கள் குறைகளை சரி செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கக் கூடும். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, மக்களின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய செலவுகள் மற்றும் முதலீடு தொடர்பான விஷயங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். தேவையற்ற வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். இது உங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். தெளிவான மற்றும் எளிமையான திட்டங்களை உருவாக்கி பின்னர் செயல்படவும். வேலை தொடர்பாக சக ஊழியர்ர்களுடன் இணைந்து பணியாற்றுவது நம்மை தரும்.இன்று உங்களுடைய பொறுப்புகளை சரியாக முடிக்க நேரம் கிடைக்கும்.














































