Oct 19, 2026 - 06:58 PM

இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு உச்ச நட்சத்திரம் தற்போது ரஜினியின் தர்மன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் சக்கபோடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வரும் நிலையில், ரஜினியின் அடுத்த படமான தர்மன் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, ஸ்ரீலீலா மற்றும் ராம் பொதினேனி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், தர்மன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய ரோல் இப்படத்திற்கு மிகவும் முக்கியமானது என கூறப்படுகிறது.
இதற்கு முன் ரஜினி நயன்தாராவுடன் இணைந்து சந்திரமுகி, குசேலன், தர்பார் மற்றும் அண்ணாத்தே ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
































