Oct 19, 2026 - 06:20 PM

காவன்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பிரதான சந்தேகநபர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (19) பிற்பகல் மஹவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் அநுராதா செனவிரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
































