Oct 19, 2026 - 08:05 PM

பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது.
நேற்றைய ஆரம்ப போட்டியின் போது, மந்தகதியில் ஓவர் விகிதத்தைப் பராமரித்ததற்காக பாகிஸ்தான் அணிக்கு அவர்களின் போட்டித் தொகையில் 10 சதவீதமும், இலங்கை அணிக்கு அவர்களின் போட்டித் தொகையில் 5 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நேர ஒதுக்கீடுகளைக் கருத்தில் கொண்ட பின்னர், பாகிஸ்தான் அணி 2 ஓவர்களும், இலங்கை அணி 1 ஓவரும் குறைவாகப் பந்துவீசியதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, எமிரேட்ஸ் ஐ.சி.சி நடுவர் குழுவின் ஜெஃப் குரோ இந்த அபராதங்களை விதித்தார்.
குறைந்தபட்ச ஓவர் விகிதக் குற்றங்கள் தொடர்பான ஐ.சி.சி நடத்தை விதியின் 2.22 வது பிரிவுக்கு அமைய, ஒதுக்கப்பட்ட நேரத்தில் பந்துவீசத் தவறும் ஒவ்வொரு ஓவருக்கும் வீரர்களின் போட்டித் தொகையில் 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும்.
பாகிஸ்தான் அணியின் தலைவர் ஷஹீன் ஷா அஃப்ரிடி மற்றும் இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டு முன்மொழியப்பட்ட தண்டனைகளை ஏற்றுக்கொண்டதால், உத்தியோகபூர்வ விசாரணைகளின் தேவை ஏற்படவில்லை.
கள நடுவர்கள், மூன்றாம் மற்றும் நான்காம் நடுவர்கள் இக்குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
































