Apr 9, 2025 - 09:44 AM -
0
இன்று (09) குரோதி வருடம் பங்குனி மாதம் 26, புதன் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உத்திராடம், திருவோணம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
இன்று உங்களுக்கு சிறப்பான நாள். முக்கியமான விஷயங்களில் லாபம் கிடைக்கும். வேலை, வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் கிடைக்கும். குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். காதல் உறவில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் துணையிடம் அன்பு கிடைக்கும். ஆனால் வேலை தொடர்பான சில விஷயங்கள் கவலை ஏற்படுத்தலாம்.
ரிஷபம்
இன்று நற்பலன்கள் கிடைக்கும் நாள். போட்டித் தேர்வு மூலம் வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நேரம். முதலீடுகளால் எதிர்காலத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் திட்டங்கள் உருவாகலாம். இன்று மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் மனதில் தோன்றும். மற்றவர்கள் உங்கள் செயல்பாடுகளால் விரும்புவார்கள். உங்கள் பேச்சால் பிறரை கவர்வீர்கள்.
மிதுனம்
இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் நேர்மறையாக சிந்திப்பீர்கள். உங்கள் பேச்சு திறமையால் மற்றவர்களை கவர்வீர்கள். சொந்தமாக தொழில் செய்பவர்கள், வியாபாரத்தை விரிவுபடுத்த இது நல்ல நேரம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் துணையுடன் அழகான உறவை அனுபவிப்பீர்கள். இன்று உங்கள் அன்பை வெளிப்படுத்த சிறந்த நாள்.
கடகம்
இன்று சில சவால்களை சந்திக்க நேரிடலாம். ஆனால் இறுதியில் எல்லாம் உங்களுக்கு சாதகமாக மாறும். அன்றாட வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் மன வருத்தங்கள் நீங்கும். நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்கள். உங்கள் மனநிலை நிலையற்றதாக இருக்கும்.
சிம்மம்
உங்கள் செல்வம் பெருகும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். எல்லா வகையான சுகங்களையும் அனுபவிப்பீர்கள். புதிய சாதனைகள் செய்ய வாய்ப்பு உள்ளது. உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். காதல் உறவு நன்றாக இருக்கும். உறவில் இருக்கும் பிரச்சனைகள் சரியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம்.
கன்னி
இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய வியாபாரம் தொடங்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் கிடைக்கும். புதிய கூட்டாணி அமையலாம். வாக்குவாதங்களை தவிர்க்கவும். நெருங்கியவர்களுடன் சண்டை வரலாம். கோபத்தை கட்டுப்படுத்தவும். வியாபாரிகள் அதை விரிவாக்க திட்டங்களை தொடங்கலாம்.
துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக லாபம் கிடைக்கும். பிறரால் ஏமாற்றப்படுவதை தவிர்க்க கவனமாக இருங்கள். குடும்ப வாழ்க்கை மன அழுத்தமாக இருக்கலாம். ஆனால் புத்திசாலித்தனமாக சமாளிக்க வேண்டும். உங்கள் இனிமையான பேச்சால் உங்கள் துணையின் மனதை வெல்லலாம். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார நிலை மேம்படும்.
விருச்சிகம்
இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பிரச்சனைகள் தீரும். தடைபட்ட வேலைகள் நடக்கும். பொருளாதார விஷயங்களில் கவனமாக செயல்பட்டால் லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே நல்லுறவு இருக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். திருமண உறவில் ஈகோ பிரச்சனைகள் வரலாம். பழைய நண்பர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். விவாதங்களை தவிர்க்கவும். வெளிப்படையாக பேசினால் தவறுகளை சரி செய்யலாம்.
தனுசு
இன்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். நிறைய விஷயங்களை சாதிக்க நினைப்பீர்கள். ஆனால் அவசர முடிவுகள் எடுத்தால் நஷ்டம் ஏற்படும். பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். செலவுகளை கட்டுக்குள் வைக்கவும். காதல் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பழைய தவறான எண்ணங்களை மாற்றி புதிய வழிகளை கண்டுபிடிப்பீர்கள். புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். அவர்களுடன் சேர்ந்து குழு நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ள ஒருவர் உங்களுக்கு உதவலாம்.
மகரம்
இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும். எதிரிகளிடம் கவனமாக இருங்கள். அவர்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்யலாம். நெருங்கிய ஒருவர் உங்களை காயப்படுத்தலாம். நண்பரின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உங்கள் காதலுக்கு சிறந்த நேரம். திருமணமான தம்பதிகளுக்கு இன்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஓய்வெடுக்கவும், நண்பர்களுடன் விருந்து, விழாக்கலில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு.
கும்பம்
இன்று சிலருக்கு சவால்கள் வரலாம். முக்கியமான முடிவுகளை எடுக்கும் முன் கவனமாக யோசித்து செயல்படவும். சமூக பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முக்கியமான நபர்களின் தொடர்பு கிடைக்கும். நெருங்கியவரின் உடல்நிலை கவலை அளிக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ளவும்.
மீனம்
உங்கள் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். நல்ல காரியங்களை செய்வீர்கள். அதனால் சமூகத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மன அமைதி கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களுடன் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வது உற்சாகத்தை அதிகரிக்கும்.