Mar 28, 2025 - 04:49 AM -
0
பிரபல நடிகை தேவதர்ஷினி ஆடிசன் என்ற பெயரில் என்ன நடக்கிறது? என்ற கேள்விக்கு பதில் கொடுத்து இருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தேவதர்ஷினியிடம் சமீப காலமாக இளம் நடிகைகளின் அந்தரங்க காட்சிகள் இணையத்தில் வெளியாகிறது.
ஆடிஷன் என்ற பெயரில் நடிகைகளிடம் அத்து மீறல்கள் நடப்பதாக தெரிகிறது. இது பற்றி உங்களுடைய பார்வை என்ன? நிஜமாகவே திரைத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை தேவதர்ஷினி நிச்சயமாக திரைத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. திரைத்துறை மட்டுமல்ல, எல்லா துறையிலுமே பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
திரை துறை சார்பில் அதற்கான கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என நடிகைகளுக்கு ஆதரவாக அவர்களுக்கு பாதுகாப்பாக பல்வேறு விதிமுறைகளை கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றன.
திரைத்துறையில் மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பு தேவை என பதிவு செய்திருந்தார். தொடர்ந்து பேசிய அவரிடம் சீரியல் நடிகை ஒருவரின் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இது பற்றி உங்களுடைய பார்வை என்ன? என்ற கேள்வி எழுப்பிய போது,
மன்னித்து விடுங்கள், அதைப்பற்றி எந்த விவரமும் எனக்கு தெரியவில்லை. அது என்ன விஷயம் என்று நான் பார்க்கவில்லை, அது என்ன என்று தெரிந்து கொண்டு அதன் பிறகு அது குறித்து இந்த பதில் கொடுக்கிறேன் என கூறியிருக்கிறார்.
கடந்த இரண்டு தினங்களாக ஒட்டுமொத்த சீரியல் மற்றும் சினிமா உலகை அதிர வைத்துக் கொண்டிருக்கும் இந்த வீடியோ காட்சிகள் குறித்து எதுவுமே எனக்கு தெரியாது என்று தேவதர்ஷினி கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.