Header Logo
பல்சுவை
தீயாய் பரவும் இளம் தம்பதியினர்

May 28, 2025 - 11:43 AM

தீயாய் பரவும் இளம் தம்பதியினர்
Mobitel inner

கேரளாவைச் சேர்ந்த வைஷ்ணவி மற்றும் ஷருண் ராஜ் என்ற தம்பதியினர் தங்களது யூடியூப் சேனல் மூலம் கடந்த ஒரு வருட காலமாக அந்தரங்கமான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமடைந்துள்ளனர்.

 

பல தம்பதியினர் காமெடி, சமையல், சுற்றுலா, மேக்கப் போன்ற பலதரப்பட்ட உள்ளடக்கங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இந்த தம்பதியினர் தங்கள் தனிப்பட்ட அந்தரங்க தருணங்களை பகிர்ந்து கவனம் ஈர்த்து வருகின்றனர்.


குறிப்பாக, வைஷ்ணவி மேக்கப் செய்யும்போது அல்லது கவர்ச்சியான ஆடைகளை அணிந்திருக்கும்போது, ஷருண் ராஜ் விதவிதமான கோணங்களில் வீடியோக்களை பதிவு செய்து, அவரது அழகை வர்ணிக்கும் வகையில் பேசி, அவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார்.

 

இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் புதிய சொகுசு கார் வாங்கியதை அறிவிக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர். இது இணையவாசிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

இவர்களின் அந்தரங்க வீடியோக்கள் மூலம் பணம் சம்பாதித்து, அதை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும், இதனை பொதுவெளியில் பகிர்வது தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும் பலர் விமர்சித்துள்ளனர்.

 

“இவர்கள் தவறான வழியில் பணம் சம்பாதித்து சொகுசு கார் வாங்குவதை பகிரங்கமாக பகிர்கிறார்கள். இதைப் பார்த்து மற்ற தம்பதியினரும் இதே பாதையை பின்பற்றினால், சமூகம் எங்கு செல்லும்?” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

மற்றொரு பயனர், “மனைவியின் அழகை மோசமான கோணங்களில் படம்பிடித்து பணம் சம்பாதிப்பது மிகவும் தவறு,” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

இருப்பினும், இவர்களது வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, பெரும் பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன. இது குறித்து சிலர், “தனிப்பட்ட வாழ்க்கையை இவ்வாறு பொதுவெளியில் பகிர்வது தனியுரிமை மீறலாகவும், இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாகவும் அமையும்,” என எச்சரிக்கின்றனர்.

 

மறுபுறம், இவர்களின் உள்ளடக்கங்கள் சிலருக்கு பொழுதுபோக்காக இருப்பதாகவும் கருத்துகள் உள்ளன.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara