Header Logo
செய்திகள்
வாள்கள், கத்திகள் மற்றும் கைக்குண்டுடன் இரத்மலானையில் 6 பேர் கைது

Aug 7, 2026 - 10:21 PM

வாள்கள், கத்திகள் மற்றும் கைக்குண்டுடன் இரத்மலானையில் 6 பேர் கைது
Mobitel inner

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு ஆகியவற்றுடன் 6 சந்தேகநபர்களைக் கல்கிஸ்ஸ ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 

அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 8 கைப்பேசிகளும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

 

கல்கிஸ்ஸ பொலிஸாரின் விசேட மோட்டார் சைக்கிள் படையணியின் அதிகாரி ஒருவர் இரத்மலானை ஆதர் பிரதேச பகுதியில் 1,000 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் நபர் ஒருவரைக் கைது செய்திருந்தார்.

 

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, போதைப்பொருள் கொள்முதல் செய்யப்பட்ட இடம் மற்றும் போதைப்பொருள் விற்பனை நடைபெறும் இந்த வீடு பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

 

குறித்த வீட்டின் நுழைவாயிலில் "சுபுன் சர்பயா நுழைவது தடை" என எழுதப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அதற்கமைய, அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த ஆயுதங்களும் பணமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 29 வயதுடையவர் என்பதோடு, ஏனைய சந்தேகநபர்கள் 33, 22, 24, 51, 36 ஆகிய வயதுடைய இரத்மலானை, நாவலப்பிட்டி மற்றும் எஹெலியகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

 

சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர், தடுப்புக்காவல் உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara