Aug 7, 2026 - 08:28 PM

குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளி சிறை முகாமில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து தெளிவுபடுத்திய போதே அத்திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளி சிறை முகாமில் இன்று (07) ஏற்பட்ட கைதிகளின் அமைதியின்மை, தற்போது சிறைச்சாலை அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெறப்பட்டதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, குறித்த சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.











