Mar 4, 2025 - 03:09 PM -
0
தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் வாகா. இதில் கதாநாயகியாக கன்னட நடிகை ரன்யா ராவ் (31) நடித்திருந்தார். இவர் தற்போது தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் நடிகை ரன்யா ராவ் சுமார் 14.8 கிலோ தங்கத்துடன் பிடிபட்டதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு துபாயில் இருந்து பெங்களூர் வந்திறங்கிய அவர் உடலில் அதிகபடியான நகைகளை அணித்திருந்ததை கண்டு சந்தேகமடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் தங்ககட்டிகள் இருப்பது கண்டரியப்பட்டது. கடந்த 15 நாட்களில் 4 முறை அவர் துபாய் சென்று வந்துள்ளார்.
இதனை கண்காணித்த அதிகாரிகள் இந்த முறை அவர் வருவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே விமான நிலையத்தில் காத்திருந்து அவரை மடக்கிப்பிடித்து சோதனை செய்து நகைகளை கைப்பற்றினர்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும்போது அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்க நகை, தங்க பிஸ்கட்டை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து நடிகை ரன்யா ராவிடம் இருந்த நகை, தங்கக்கட்டி என்று மொத்தம் 14.80 கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகை ரன்யா ராவை கைது செய்து வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கடத்தலின் பின்னணியில் இன்னும் வேறு பல நபர்கள் இருக்கலாம் என்ற அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஐ.பி.எஸ். அதிகாரியான ரன்யா ராவின் தந்தை கர்நாடகாவில் ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.