ஜோதிடம்

இன்றைய ராசி பலன்!

Apr 14, 2025 - 07:30 AM -

0

இன்றைய ராசி பலன்!

இன்று (14) தமிழ் புத்தாண்டு ஆரம்பமாகிறது. விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 1, திங்கட் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உள்ள சேர்ந்த உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

 

மேஷம்

 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கோபத்தையும், கருத்து வேறுபாடுகளையும் தவிர்க்கவும். இன்று முக்கிய வேலைகளை முடிப்பதில் முயற்சி மற்றும் ஆற்றல் தேவைப்படும். அவசர முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டிய நாள்.

 

ரிஷபம்

 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று எதிர் பாலினத்தவர்கள் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்படவும். முக்கிய வேலைகளை முடிக்க கடின முயற்சி தேவைப்படும். பணிச் சுமை காரணமாக மனதில் சோர்வு அதிகரிக்கும். தொழில் தொடர்பான பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். வணிகத்தில் வெற்றியும், லாபத்தையும் தரும்.

 

மிதுனம்

 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடைய பரஸ்பர அன்பு குறைவாக இருக்கும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதிக கவனம் தேவை. தடைப்பட்ட வேலைகளை முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. காதல் உறவில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விதிமுறை தொடர்பான விஷயத்தில் கவனமாக இருப்பதோடு, செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

 

கடகம்

 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உறவுகளில் உள்ள பிரச்சனைகளை சமாளிக்க முடியும். உங்களின் புரிதல் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு வெற்றியை பெற்று தரக்கூடியதாக இருக்கும். கடந்த கால கடின உழைப்பிற்கான நற்பலனை பெறுவீர்கள். உடல் நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். தொழில் முயற்சிகளில் கவனம் தேவை.

 

சிம்மம்

 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பரஸ்பரப் புரிதல் காதல் வாழ்க்கையை மேம்படுத்தும். சுறுசுறுப்பாக செயல்பட்டால் எதிலும் சிறப்பான வெற்றியை பெறலாம். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்து வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.. தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள்.

 

கன்னி

 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று புதிதாக மலர்ந்த நட்பு காதலாக மாற வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. உங்கள் சூழ்நிலை இன்று சாதகமற்றதாக இருக்கும். புதிய வணிக ஒப்பந்தங்கள் பெரிய லாபத்தை தரும். நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவை பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

 

துலாம்

 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறவில் இணக்கமான சூழல் உருவாகும். வீட்டின் சூழ்நிலை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் உறவில் அன்பும், புரிதலும் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆபத்தான முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பதோடு, ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்கவும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று தனிப்பட்ட உறவில் வளர்ச்சி இருக்கும். வேலை, தொழில் தொடர்பாக ஆர்வம் குறையும். இன்று எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய நாள். புதிய திட்டங்களை தொடங்குதல் அல்லது முக்கிய முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் நிதானம் தேவை. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவதை தவிர்க்கவும்.

 

தனுசு

 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பிறரின் அன்பும் அரவணைப்பையும் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையைச் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். வணிகம் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பாக பயணங்கள் அனுகூல பலனை தரும்.

 

மகரம்

 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று திருமண உறவில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். இன்று குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கவனம் தேவை. அன்றாட வேலையா முடிப்பதில் அலைச்சல் ஏற்படும். இந்த தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

 

கும்பம்

 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தினருடன் நல்லுறவை பேண எல்லா முயற்சியும் எடுப்பீர்கள். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. தொழில், வணிகம் தொடர்பான விஷயங்களில் முக்கிய நாளாக இருக்கும். வேலை வாய்ப்புக்காக முயற்சிப்பவர்களுக்கு அது கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியை தரும்.

 

மீனம்

 

மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப சூழ்நிலை சமூகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறப்பாக இருக்கும். நண்பர்கள், நலம் விரும்பிகளின் ஆதரவை பெறுவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இன்று நீங்கள் இருக்கக்கூடிய புத்திசாலித்தனமான முடிவுகள் வியாபாரத்தில் லாபத்தை அதிகரிக்கும்.

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05

காணொளி
கொழும்புக்கு செல்ல நானுஓயாவில் குவியும் பயணிகள்

கொழும்புக்கு செல்ல நானுஓயாவில் குவியும் பயணிகள்

ஒற்றுமையாக இல்லாது விட்டால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும்

ஒற்றுமையாக இல்லாது விட்டால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும்

எங்கள் மீது விமர்சனங்ளை வைத்து வருகிறார்கள்

எங்கள் மீது விமர்சனங்ளை வைத்து வருகிறார்கள்

வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு

வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு

இது ஒரு ஜனாதிபதி பேசும் விடயமாக?

இது ஒரு ஜனாதிபதி பேசும் விடயமாக?

பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதி

பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதி

வடக்கை தம்வசப்படுத்த  NPP முயல்கிறது

வடக்கை தம்வசப்படுத்த NPP முயல்கிறது

மகோற்சவத்தின் 24 ஆம் திருவிழா

மகோற்சவத்தின் 24 ஆம் திருவிழா

'விசுவாவசு' சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜை

'விசுவாவசு' சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜை

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு


ஸ்ஷோட்ஸ்
ஜனாதிபதி தலைமையில் யாழில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் யாழில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

மன்னாரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

மன்னாரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

கொழும்புக்கு செல்ல நானுஓயாவில் குவியும் பயணிகள்

கொழும்புக்கு செல்ல நானுஓயாவில் குவியும் பயணிகள்

ஒற்றுமையாக இல்லாது விட்டால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும்

ஒற்றுமையாக இல்லாது விட்டால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும்

எங்கள் மீது விமர்சனங்ளை வைத்து வருகிறார்கள்

எங்கள் மீது விமர்சனங்ளை வைத்து வருகிறார்கள்

இது ஒரு ஜனாதிபதி பேசும் விடயமாக?

இது ஒரு ஜனாதிபதி பேசும் விடயமாக?

பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதி

பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதி

வடக்கை தம்வசப்படுத்த  NPP முயல்கிறது

வடக்கை தம்வசப்படுத்த NPP முயல்கிறது

மகோற்சவத்தின் 24 ஆம் திருவிழா

மகோற்சவத்தின் 24 ஆம் திருவிழா

'விசுவாவசு' சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜை

'விசுவாவசு' சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜை