ஜோதிடம்

மாங்கல்ய பாக்கியம் தரும் ஆடிப்பெருக்கு நாளை ....

Aug 2, 2025 - 12:08 PM -

0

மாங்கல்ய பாக்கியம் தரும் ஆடிப்பெருக்கு நாளை ....

பஞ்சபூதங்களில் முக்கியமானது நீர். நீரில் இருந்தே உயிர்கள் தோன்றியதாக சொல்லப்படுகிறது. 

அதனால் நீரை போற்றி, வணங்கி, நீருக்கும், ஆறுகள் போன்ற நீர் நிலைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது. 

இதனடிப்படையில் நாளைய தினம் (03) ஆடிப் பெருக்கு கொண்டாடப்படவுள்ளது. 

இந்த நாளில் எதை துவங்கினாலும் அது பல மடங்காக பெருகி, நமக்கு வெற்றியை தரும் என்பது ஐதீகம். 

ஆறு நீரையும், மழையையும் மட்டுமே நம்பி விவசாயம் செய்த காலம் என்று ஒன்று இருந்தது. 

இந்த சமயத்தில் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால் தான், தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். 

இதற்காக நதிகளை தெய்வமாக கருதி போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின்னர் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றனர். 

ஆடி மாதம் விவசாய பணிகளை துவங்க செல்லும் விவசாயிகள் நில மகளையும், நீர் மகளையும் வணங்கி விட்டு, மண் செழித்து, விவசாயம் செழித்து, எங்கள் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளும் நாளாக ஆடிப் பெருக்கு திருநாளை கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டது. 

ஆடி மாதத்தில் வரும் 18ஆம் திகதி, ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவதுடன், இதை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் மக்கள் அழைக்கின்றனர். 

ஆடிப்பெருக்கு அன்று திருமணமானவர்கள், தங்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கி விட்டு, புதிய மஞ்சள் கயிற்றை தன் கணவன் கையால் கட்டிக்கொள்வர். 

இதன்மூலம் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்பதும், வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதும் நம்பிக்கை. 

திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த ஆடி மாதத்திற்குள் அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கையாகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05

காணொளி
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சிறப்பு பூஜை செய்து ஆசி பெற்றார்

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சிறப்பு பூஜை செய்து ஆசி பெற்றார்

இன்றைய செம்மணியின் அகழ்வுப்பணிகள்!

இன்றைய செம்மணியின் அகழ்வுப்பணிகள்!

ஜனாதிபதி செம்மணியை பார்வையிடுவாரா?

ஜனாதிபதி செம்மணியை பார்வையிடுவாரா?

புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட 16 எலும்புக்கூட்டு தொகுதிகள்

புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட 16 எலும்புக்கூட்டு தொகுதிகள்

அதை வைத்தியசாலையில் தான் கேட்க வேண்டும் தம்பி!

அதை வைத்தியசாலையில் தான் கேட்க வேண்டும் தம்பி!

மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆதரவாளர்கள்!

மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆதரவாளர்கள்!

அதை வைத்தியசாலையில் தான் கேட்க வேண்டும் தம்பி!

அதை வைத்தியசாலையில் தான் கேட்க வேண்டும் தம்பி!

இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

அவங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த சட்னியா?

அவங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த சட்னியா?

ஸ்ஷோட்ஸ்
ஆர்ப்பாட்டத்திற்கு இடையே பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

ஆர்ப்பாட்டத்திற்கு இடையே பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

அவங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த சட்னியா?

அவங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த சட்னியா?

சோமரத்ன ராஜபக்ச ஏனைய மனி புதைக்குழிகளையும் காட்டுவதற்கும் தயார்!

சோமரத்ன ராஜபக்ச ஏனைய மனி புதைக்குழிகளையும் காட்டுவதற்கும் தயார்!

எங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்க்கின்றோம்!

எங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்க்கின்றோம்!

இதற்கு தீர்வு தான் என்ன?

இதற்கு தீர்வு தான் என்ன?

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்!

நுவரெலியாவில் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!

நுவரெலியாவில் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!

பிமல் ரத்நாயக்க கரிசனையுடன் செயல்படுவர் என்று நம்புகிறேன்

பிமல் ரத்நாயக்க கரிசனையுடன் செயல்படுவர் என்று நம்புகிறேன்

தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்திய ஓட்டுநர்

தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்திய ஓட்டுநர்

யாழில் ஹர்த்தால் நிலவரம்

யாழில் ஹர்த்தால் நிலவரம்