Aug 3, 2025 - 09:12 AM -
0
இன்று (03) ஆடிப் பெருக்கு தினம் உள்ள தினத்தில், தொட்டதெல்லாம் பொன்னாகும். நாள் என்பதால், இன்றைய கிரக அமைப்பின்படி சில ராசிகளுக்கு அற்புத பலன்கள் கிடைக்கும்.
மேஷ ராசி
மேஷ ராசிக்கு இன்று ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்துவது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்படுவோம். குடும்ப விஷயத்தில் தவறான புரிதல்களைத் தவிர்ப்பது நல்லது. நிதிநிலை சாதகமாக அமையும். கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்கு என்ற குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் எண்ணங்களில் தெளிவு தேவை. முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கவனம் தேவை. வெளிநாடு தொடர்பான வேலைகளில் முன்னேற்றம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். புதிய முயற்சிகள் தன்னம்பிக்கை யுடன் எடுத்தால் வெற்றி கிடைக்கும்.
மிதுன ராசி
மிதுன ராசிக்கு இன்று வேலையில் அழுத்தமான சூழல் இருக்கும் பணியிடத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு குறைவாகவே கிடைக்கும். மேலதிகாரிகள் கோபப்பட வாய்ப்பு உண்டு. உங்கள் வேலையை சரியாக திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் பிரச்சனைகள் தவிர்ப்பது நல்லது.
கடக ராசி
கடக ராசிக்கு மிகவும் நல்ல நாளாக அமையும்.. உங்களின் அனைத்து திட்டங்களும் சரியான வகையில் நிறைவேற்ற முடியும். வித்தியாசமான உற்சாக மனதில் பிறக்கும். அதனால் குழுவாக செய்யக்கூடிய வேலைகளில் வெற்றி கிடைக்கும். உங்களின் புகழ் அதிகரிக்கும் நாள். நிதி விஷயங்களில் கவனம் தேவை.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்கு நல்ல நாளாக அமையும்.. உழைப்பிற்கான வெகுமதி கிடைக்கும். வேலையின் சூழல் சாதகமாக இருக்கும். வேலை மாற்றுதல், பெரிய முடிவுகள் எடுத்தல் போன்ற விஷயத்தில் சிந்தித்து கவனமாக செயல்படவும். நிதி சார்ந்த விஷயங்களில் நிதானம் அவசியம். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
கன்னி ராசி
கன்னி ராசிக்கு வேலையில் உள்ள தடைகள் சந்திக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம் உங்கள் சூழ்நிலை திடீரென முன்னேற்றமும் ஏற்படும். உறவுகள் விஷயத்தில் சில வருத்தங்கள் ஏற்படும். பொறுமையாக பேசுவது, செயலை அணுகுவது நல்லது. பழைய முதலீடுகள் மூலம் நன்மை ஏற்படும்.
துலா ராசி
துலாம் ராசிக்கு இன்று வேலையை மேம்படுத்த கடின உழைப்பு தேவைப்படும். பலனையும் பெறுவீர்கள். முதலீடு சார்ந்த விஷயங்களில் பிறர் கூறுவதை கேட்டு செயல்படாமல் நிதானமாக ஆராயவும். நிதி சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்கு இன்று இரவு விஷயங்களை கவனமாக இருக்கவும் வணிகஸ்தர்கள் கவனமாக இருக்க வேண்டிய நாள். தவறான உறவுகள், கூட்டாளிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று எந்த செயலுக்கும் உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டாம். உடல் நலம் தொடர்பான விஷயங்கள் கவனம் தேவை. சிலர் பயணங்கள் செல்ல அதிக செலவிட வாய்ப்பு உண்டு.
தனுசு ராசி
தனுசு ராசி நேயர் இன்று ஆக்ரோஷமாக செயல்படுவீர்கள். அதனால் எதிரிகளை எளிதாக வீழ்த்த முடியும். உங்கள் பணியிடத்தில் உற்சாகம் நிறைந்திருக்கும். இந்த செயலையும் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான முன்னேற்றம் பெற கடன் வாங்க வேண்டிய சூழல் இருக்கும். உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக நிர்வாகிக்க வேண்டிய நாள்.
மகர ராசி
மகர ராசி பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் திட்டங்களை களத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வது நல்லது. வணிகத்தில் நல்ல லாபம் பெற முடியும். புதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆவணங்களை கவனமாக படிப்பது நல்லது. முதலீடுகளை எச்சரிக்கையாக செய்யவும்.
கும்ப ராசி
கும்ப ராசிக்கு தொழில் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். இருப்பினும் சிறிய விஷயங்களுக்கு கூட எரிச்சல், கோபமடைவதை தவிர்க்கவும். அலுவலகத்தில் ஜாதகம் பெற்றதாக இருக்கும். புத்திசாலித்தனமாக வேலையை செய்து முடிக்கவும்.
மீன ராசி
மீன ராசிக்கு நம்பிக்கை அதிகரிக்கக்கூடிய நாள். கடந்து சில நாட்களாக இருந்த சிக்கல்கள் தீரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் கடினமான வேலைகளை முடிக்க முடியும். உங்கள் திறமையான பிறர் பாராட்டுவார்கள். நம்பிக்கையுடன் செயல்பட்டால் உயர்வு கிடைக்கும்.