ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் (06.08.2025)

Aug 6, 2025 - 09:13 AM -

0

இன்றைய ராசிப்பலன் (06.08.2025)

இன்று (06) சந்திரன் மூல நட்சத்திரத்தில் இருக்கிறார். மரணயோகம் கூடிய இன்று கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமமாக அமைகிறது. கஜலட்சுமி யோகம் உருவாகக்கூடிய இன்று எந்த ராசிக்கு நன்மை கிடைக்கும் என பார்ப்போம்.

 

மேஷ ராசி பலன்

 

மேஷ ராசிக்கு இன்று தொழில் ரீதியாக சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் நிலுவையில் உள்ள வேலைகளை ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். சிறிய பணிகளில் முழு ஆர்வத்தைக் காட்டி வெற்றி பெற முயற்சி செய்வீர்கள். இன்று உங்களின் மனதிலும், உடலிலும் புது ஆற்றல் பிறக்கும். கடந்த சில நாட்களாக இருக்கும் சச்சரவுகள் முடிவுக்கு வரும்.மாணவர்கள் படிப்பில் உள்ள சுமை குறையும். இன்று தொழில்கள் கிடைக்கும்.

 

ரிஷப ராசி பலன்

 

ரிஷப ராசிக்கு இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பணம் சேர வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு வேலையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் மனதில் இருக்கும் கவலைகள் குறைய கூடிய நாள். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால், உங்கள் செயல்களை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட வேண்டிய அவசியம்.

 

மிதுன ராசி பலன்

 

மிதுன ராசிக்கு இன்று மரியாதை அதிகரிக்க கூடிய நாள். இன்று விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். உங்கள் குடும்பத்திற்கு நிறைவேற்ற சாதகமான நாளாக இருக்கும். இன்று சிலருக்கு குறுகிய பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. நன்றாக செயல்களில் சிறப்பாக செயல்பட்டு மரியாதை அதிகரிக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

 

கடக ராசி பலன்

 

கடக ராசிக்கு உங்கள் உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு தரக்கூடிய நாளாக இருக்கும்.குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் குறையும். பணியிடத்தில் வேலை தொடர்பாக பிரச்னைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் மனதளவில் கோபம், உணர்ச்சிவசப்பட வாய்ப்பு உண்டு. இன்று பிள்ளைகளின் செயல்களை கண்காணிப்பதோடு அவர்களுக்கு மதிப்பு மற்றும் மரபுகளை கற்றுத் தருவது நல்லது.

 

சிம்ம ராசி பலன்

 

இன்று சிம்ம ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். உங்கள் வேலையில் வேகம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இருக்கக் கூடிய தடைகள் நீங்கி இனிமை அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது தொடர்பாக ஒப்பந்தங்கள் இறுதி செய்ய வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்கள் பணி இடத்தில் வேலையை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். இன்று உங்களின் அர்ப்பணிப்புக்கான நிறைய கிடைக்கும். அரசியல் தொடர்புடையவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கலாம்.

 

கன்னி ராசி பலன்

 

கன்னி ராசியை சேர்ந்தவர்கள் இன்று கடினமாக உழைப்பு தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் வேலை தொடர்பாக மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும். இன்று யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். பணம் திரும்பி வர சாதமற்ற நாள். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கவலை அதிகரிக்கும்.

 

துலாம் ராசி பலன்

 

துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் அதிகமாக கிடைக்கும். பெண்கள் தொடர்பாக சில முக்கிய தகவல் பெறுவீர்கள். வேலை தொடர்பாக மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்களுடன் பரஸ்பர ஒத்துழைப்பு கிடைக்கும். இந்த நீங்கள் யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். உங்களின் தனிப்பட்ட முயற்சிகளால் நீங்கள் நினைத்த இலக்கை அடைய முடியும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

 

விருச்சிக ராசி பலன்

 

விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த நாள் வசதிகள் அதிகரிக்க கூடியதாக இருக்கும். உங்கள் குடும்ப பொறுப்புகளை சரியாக முடிக்க முயற்சி செய்யவும். நண்பர்களுடன் நேரத்தை செலவிட நினைப்பீர்கள். உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்தி செயல்பட வேண்டியது அவசியம். வேலை அல்லது குடும்ப விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுப்பதில் அவசரப்பட வேண்டாம். இன்று உங்கள் வருமான அதிகரிப்பால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

 

தனுசு ராசி பலன்

 

தனுசு ராசிக்கு இன்று நல்ல பலன்களை கிடைக்கும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள் உங்களின் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தவும். இன்று உங்களின் ரகசியங்கள், முக்கிய விஷயங்களை வெளி ஆட்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இன்று உங்களுக்கு கிடைக்க கூடிய செல்ல தொடர்புகளால் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்களை வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை இருக்கும்.

 

மகர ராசி பலன்

 

மகரம் ராசிக்கு இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவும். பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்பட்டால் வெற்றி உண்டாகும். இன்று உங்களின் குடும்ப சூழல், வேலை தொடர்பாக சூழல் சாதகமாக இருக்கும். அதனால் உங்கள் வேலைகளை மகிழ்ச்சியாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்கள் உறவுகளில் சில பதட்டமான சூழல் இருக்கும். ஆபத்தான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

 

கும்பம் ராசிபலன்

 

கும்ப ராசிக்கு இன்று முக்கியமான நாளாக இருக்கும். கலைத்துறை, படைப்பாளிகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அன்பானவர்களுடன் உறவில் நெருக்கமும், சில மதிப்புமிக்க பொருட்களை வாங்கவும் வாய்ப்பு உண்டு. உங்களின் தடைப்பட்ட திட்டங்கள் முன்னேற்றம் அடையும். உங்களின் திறமையை வெளிப்பட வாய்ப்புகள் உண்டு. பிறரின் ஆதிக்கத்தின் பெயரில் எந்த ஒரு செயலிலும் ஈடுபட வேண்டாம். இதனால் உங்களுக்கு தான் சிக்கல் ஏற்படும்.

 

மீன ராசி பலன்

 

மீன ராசிக்கு செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். இன்று அதிகரிக்கும் செலவுகளால் மனதளவில் கவலை ஏற்படும். வேலையை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் சிந்தனை அதிகரிக்கும் நாள். தொழில் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. குறிப்பாக முதலீடு விஷயங்களில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். பண பரிவர்த்தனை விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம். இல்லையெனில் நிதி இழப்பு சந்திக்க வாய்ப்பு உண்டு.

Comments
0

MOST READ
01
02
03
04
05

காணொளி
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சிறப்பு பூஜை செய்து ஆசி பெற்றார்

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சிறப்பு பூஜை செய்து ஆசி பெற்றார்

இன்றைய செம்மணியின் அகழ்வுப்பணிகள்!

இன்றைய செம்மணியின் அகழ்வுப்பணிகள்!

ஜனாதிபதி செம்மணியை பார்வையிடுவாரா?

ஜனாதிபதி செம்மணியை பார்வையிடுவாரா?

புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட 16 எலும்புக்கூட்டு தொகுதிகள்

புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட 16 எலும்புக்கூட்டு தொகுதிகள்

அதை வைத்தியசாலையில் தான் கேட்க வேண்டும் தம்பி!

அதை வைத்தியசாலையில் தான் கேட்க வேண்டும் தம்பி!

மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆதரவாளர்கள்!

மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆதரவாளர்கள்!

அதை வைத்தியசாலையில் தான் கேட்க வேண்டும் தம்பி!

அதை வைத்தியசாலையில் தான் கேட்க வேண்டும் தம்பி!

இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

அவங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த சட்னியா?

அவங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த சட்னியா?


ஸ்ஷோட்ஸ்
ஆர்ப்பாட்டத்திற்கு இடையே பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

ஆர்ப்பாட்டத்திற்கு இடையே பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

அவங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த சட்னியா?

அவங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த சட்னியா?

சோமரத்ன ராஜபக்ச ஏனைய மனி புதைக்குழிகளையும் காட்டுவதற்கும் தயார்!

சோமரத்ன ராஜபக்ச ஏனைய மனி புதைக்குழிகளையும் காட்டுவதற்கும் தயார்!

எங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்க்கின்றோம்!

எங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்க்கின்றோம்!

இதற்கு தீர்வு தான் என்ன?

இதற்கு தீர்வு தான் என்ன?

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்!

நுவரெலியாவில் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!

நுவரெலியாவில் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!

பிமல் ரத்நாயக்க கரிசனையுடன் செயல்படுவர் என்று நம்புகிறேன்

பிமல் ரத்நாயக்க கரிசனையுடன் செயல்படுவர் என்று நம்புகிறேன்

தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்திய ஓட்டுநர்

தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்திய ஓட்டுநர்

யாழில் ஹர்த்தால் நிலவரம்

யாழில் ஹர்த்தால் நிலவரம்