ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் (01.09.2025)

Sep 1, 2025 - 06:32 AM -

0

இன்றைய ராசிப்பலன் (01.09.2025)

இன்று (01) சந்திர பகவான் விருச்சிகத்தில் கேட்டை, தனுசுவின் மூலம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். சமசப்தம யோகம் நிறைந்த இன்று சித்த யோகம் கூடிய தினத்தில், மேஷ ராசியில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று உருவாகும் புதாதித்ய யோகத்தால் செப்டம்பர் முதல் நாளில் லாபம் அதிகரிக்கும். 

மேஷ ராசி பலன் 

மேஷ ராசிக்கு தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். பெரிய லாபத்தை தேடி சிறிய லாபங்களை தவறவிடுவீர்கள். இன்று பண பரிவர்த்தனை விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கும். இன்று உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அனைவரையும் ஒன்றிணைக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களுடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கும். நெருக்கம் அதிகரிக்கும். 

ரிஷப ராசி பலன் 

ரிஷப ராசிக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடவும், ஓய்வு எடுக்கவும் நேரம் கிடைக்கும். வங்கி துறை, கணக்காளர் போன்ற பணத்தை கையாளக்கூடிய நபர்கள் மிகவும் கவனமாக இருக்கவும். இன்று உங்கள் பணத்தை சரியான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. உங்கள் வேலை மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவனமாக இருக்கவும். சகோதரர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்கவும். பொருளாதார நிலையை முன்னேற்ற உங்கள் துணையின் ஆதரவு கிடைக்கும். 

மிதுன ராசி பலன் 

மிதுன ராசிக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் முடிவெடுக்கும் திறன் நல்ல பலனை தரும். இன்று வெளியாட்களிடம் ஆலோசனை கேட்க வேண்டாம். முக்கிய பணிகளை முடிக்க உங்கள் வேலைகளை பட்டியலிட்டு கொள்வது நல்லது. சில வணிகத் திட்டங்கள் வேகம் பெறும். உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்யவும். மாணவர்கள் ஏதேனும் போட்டித் தேர்வு தயாரானால் அதில் நல்ல பலன் கிடைக்கும். 

கடக ராசி பலன் 

கடக ராசியை சேர்ந்தவர்கள் கலமையான பலனை பெறுவார்கள். இன்று வெளியூர், வெளிநாடு தொடர்பான ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான வர்த்தகத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் விதிகளையும் ஒழுங்கு முறைகளையும் முழுமையாக கடைப்பிடிக்கவும். உங்கள் பிள்ளைகள் தொடர்பான தொழிலை நினைத்து மன அழுத்தம் ஏற்படும். சிலருடன் சேர்ந்து செய்யும் தொழில் அல்லது வேலையில் உங்கள் கருத்துக்களை மிகவும் கவனமாக முன்வைக்கவும். 

சிம்ம ராசி பலன் 

சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு வணிகம் தொடர்பாக பெரிய சாதனையை நிகழ்த்துவீர்கள். உங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறலாம். அரசாங்க வேலை தொடர்பான விஷயங்களில் சூழல் சாதகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இடம் மாற்றம் சற்று கவலையை தரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். அதனால் முக்கியம் முடிவுகளை எடுக்க வேண்டாம். உங்களின் மனக்கவலையை உங்கள் தாயிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசியை சேர்ந்தவர்கள் பணியிடத்தில் நல்ல பலனை பெறுவார்கள். உங்களின் செல்வம் அதிகரிக்கும். உங்களின் பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்காக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் கிடைக்கும். இருப்பினும் உங்கள் திட்டங்களை உடன் பிறந்தவர்களிடம் விவரிக்க சில மாற்று யோசனைகளும் கிடைக்கும். எந்த வேலையிலும் வெளியார்களிடம் ஆலோசனை பெற வேண்டாம். மாணவர்கள் உயர்கல்விக்கான பாதை விரிவடையும். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு பெறுவீர்கள். ஒவ்வொரு துறையிலும் எதிர்பார்த்த வெற்றியை பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் தொடர்பாக உங்களின் பழைய திட்டங்களில் இருந்து நல்ல பலனை பெறுவீர்கள். உங்களின் தொழிலில் உச்சத்தை அடைவீர்கள். பிறரின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதற்கு முன் அதை முழுவதுமாக ஆராய்வது நல்லது. இன்று பயணம் செல்வதற்கான சில தகவல்கள் கிடைக்கும். இன்று எதிர்பார்த்தது போல நல்ல வருமானம் கிடைப்பதால் மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும். 

விருச்சிக ராசி பலன் 

விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் இன்று எதிலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். இல்லையெனில் அது பிரச்சினையை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். உடல் நலம் தொடர்பாக அலட்சியமாக இருக்க வேண்டாம். பெரிய நோய் அல்லது உடல் நலம் பாதிப்பு உங்களை துன்புறுத்தும். அதனால் ஆரோக்கியம் தொடர்பாக கவனம் தேவை. உங்கள் வேலை தொடர்பாக விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்கவும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி சேர்ந்தவர்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உங்கள் வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வேலையை முடிப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சக நண்பர்களின் உதவியால் தீர்க்க முடியும். உங்களின் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்று எந்த ஒரு பெரிய இலக்கையும் அடைய முடியும் என்பதால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று அதிகமான உற்சாகத்துடன் எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம். 

மகர ராசி பலன் 

மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு பிரச்சினைகள் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பொறுப்புக்களை சரியாக நிறைவேற்ற முயற்சிக்கவும். புதிய திட்டமிடல் உங்களுக்கு நல்ல பலனை தரும். இன்று அவசரமாக எந்த ஒரு வேலையும் செய்வது அல்லது முடிவு எடுப்பதை தவிர்க்கவும். ஒரு குடும்பத்திலும் பணியிடத்திலும் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். அதன் மரியாதை அதிகரிக்கும். அதோடு உணர்ச்சி வசப்படாமல் செயல்படுவது அவசியம். 

கும்ப ராசி பலன் 

கும்ப ராசியை சேர்ந்தவர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். வேலையை மாற நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். இன்று உற்சாகம் அதிகரிக்க கூடிய நாள். அன்புக்குரியவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் பெரியவர்களின் ஆலோசனையால் கடினமான சூழ்நிலை கடக்க முடியும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக அதிக சுமையை சுமப்பார்கள். இன்று ஆசிரியர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவும். இன்று பெற்றோருடன் ஆன்மீகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். 

மீன ராசி பலன் 

மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு நல்ல நாளாக அமையும். உங்கள் குடும்பத்தில் மூத்த நபர்களின் ஆலோசனை கிடைக்கும். பணியிடத்தில் மிகவும் கவனமாக பேசவும். இன்று கடினமான சூழல் இருந்தாலும் அதன் மூலம் நல்ல அனுபவம் கிடைக்கும். தொழில் தொடர்பாக முன்னேற்றத்திற்கான நல்ல நாளாக அமையும்.. புதிய வீடு அல்லது புதிய வாகனம் வாங்குதல் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். உங்கள் வேலைகளை சரியாக பட்டியலிட்டு செயல்பட்டால் முன்னேற்றம் அதிகரிக்கும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05

காணொளி
இதுவரை 235 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

இதுவரை 235 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை!

194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை!

பார்ப்பதை விட நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு!

பார்ப்பதை விட நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு!

செம்மணியில் இன்றும் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்

செம்மணியில் இன்றும் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்

போம்புரு எல்ல நீர்வீழ்ச்சியில் காணாமல் போன ஆசிரியரின் சடலம் மீட்பு

போம்புரு எல்ல நீர்வீழ்ச்சியில் காணாமல் போன ஆசிரியரின் சடலம் மீட்பு

விதை தென்னை தோட்டத்தை ஆரம்பித்த ஜனாதிபதி

விதை தென்னை தோட்டத்தை ஆரம்பித்த ஜனாதிபதி

பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைப்பு

பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைப்பு

சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா

சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா

மயிலிட்டித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

மயிலிட்டித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

அரசாங்கம் காத்திரமான ஒரு முடிவை எடுக்க வேண்டும்

அரசாங்கம் காத்திரமான ஒரு முடிவை எடுக்க வேண்டும்


ஸ்ஷோட்ஸ்