Sep 11, 2025 - 07:32 AM -
0
இன்று (11) சந்திரன் மேஷ ராசியில் பயணிக்கிறார். அந்த வகையில் சனி பகவானின் பன்னிரண்டாம் பார்வையை பெறுகிறார். இன்று நிகழும் இந்த சிறப்பு கிரகநிலை மாற்றங்கள், குறிப்பிட்டு ஒரு சில ராசியினருக்கு, விஷ்ணு பகவானின் ஆசிய பெற்று தருவதோடு - அவர்களின் தொழில் வாழ்க்கையில் மகத்தான சில திருப்பங்களையும் கொண்டு வருகிறது. அரசியல் செல்வாக்கு கொண்டவர்கள் தங்கள் துறையில் அடுத்த நிலைக்கு உயர்வதற்கான வாய்ப்புகளை இன்று பெறலாம். நிதி நிலையில் மாற்றம் காணலாம், மண வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி காணலாம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!
மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் தங்கள் தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட தடைகளை போகும் வழிகள் கிடைக்கும். அதாவது நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியங்கள் இன்று வெற்றிபெறமாக நடைபெறும். குறிப்பாக அரசியல் உள்ளிட்ட சமூக சேவை தொடர்பான துறையில் இருக்கும் நபர்கள், உயர் பதவிகளை அடைவார்கள்.
அலுவலகப் பணி மேற்கொண்டு வரும் நபர்கள், பணியிடத்தில் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு, பதவி உயர்வுக்கான அடித்தளத்தையும் போடுவார்கள். குடும்ப வாழ்க்கையில் உங்கள் வாழ்க்கை துணையுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும், மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் நற்செய்திகளை கொண்டு வரும் ஒரு தினமாக இருக்கும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், உங்கள் திறமைகளை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் பல கிடைக்கும். பொருளாதார நிலையை பொறுத்தவரையில், போதுமான வருமானம் கிடைக்கும் - கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
புதிய வாகனம், வீடு, நிலம் போன்ற சொத்துக்களை வாங்கி குவிக்கும் வாய்ப்புகளும் இன்று காணப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில், உங்கள் குடும்ப உறவுகள் முழு ஆதரவு தெரிவிப்பார்கள். உங்கள் விருப்பத்திற்கு பச்சை கொடி காட்டுவார்கள்
மிதுனம்
அறிவாற்றல் மற்றும் படைப்பாற்றலுக்கு பெயர் பெற்ற மிதுன ராசியினர் இன்றைய தினம் தங்கள் பணியிடத்தில் போதுமான நேரத்தை செலவிட வேண்டி இருக்கும். வழக்கமான பணிகளை செய்து முடிக்க காலம் அதிகம் தேவைப்படும். பணி காரணமாக பல்வேறு இடங்களுக்கு பயணிக்க வேண்டி இருக்கும், சிலர் வெளிநாடு வரையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இன்று மேற்கொள்ளும் பயணங்கள் உங்கள் ஆற்றல் முழுவதையும் உறிஞ்சலாம். உடல் சோர்வுக்கு வழி வகுக்கலாம். மோட்டார் வாகன பயணங்கள் எதிர்பாராத விபத்துக்களை உண்டாக்கலாம். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது!
கடகம்
கடக ராசியினரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் ஒரு தினமாக இன்றைய தினம் இருக்கும். முன்னர் செய்து வைத்த முதலீடுகள் வழியே எதிர்பாராத வருமானம் கிடைக்கும். அதிலும் குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகள் செய்த நபர்களுக்கு எதிர்பாராத பலன்கள் பல கிடைக்கும்.
பெற்றோர் துணை இன்றி தனது சொந்த காலில் நிற்க முயற்சிக்கும் கடக ராசி பெண்களுக்கு, இன்றைய தினம் ஒரு நற்செய்தி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும், தங்கள் விருப்பம் போல் தங்கள் மண வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு ஒன்றும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியினர் இன்றைய தினம் தங்கள் பணியிடத்தில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கலாம். சுருக்கமாக கூறினால் இன்றைய தினம் அவர்களுக்கு சவால் நிறைந்த ஒரு தினமாக இருக்கும். தங்களின் வழக்கமான பணிகள் பாதிக்கப்படும், உயர் அதிகாரிகளின் அழுத்தம் பணியை ராஜினாமா செய்ய தோன்றும். தற்போது இருக்கும் துறையை விட்டு மாற்றுத் துறையில் பயணிக்க விரும்புகிறீர்கள்.
பணியிடத்தில் காணப்படும் சவால்கள், உங்களை சிந்திக்க விடாமல் தடுக்கும்; அடுத்து என்ன செய்வது என தெரியாத அளவிற்கு ஒரு குழப்ப நிலையில் உண்டாக்கும். இந்த சவால்களை சமாளிக்க பொறுமையும், நிதானமும் இன்ற அவசியமாகும்!
கன்னி
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் கலவையான பலன்கள் கிடைக்கும். தவிர்க்க முடியாத சில முக்கியமான செலவுகளை இன்று செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இந்த செலவுகளை சமாளிக்க போதுமான வருமானம் இருக்காது. தொழில் போட்டிகள் அதிகரிக்கும், வழக்கமான வருமானத்தை விட குறைவாகவே இன்று வருமானம் கிடைக்கும்.
பணியிடத்தில் சக ஊழியர்கள் உடன் உண்டாகும் வாக்குவாதங்கள், உங்கள் செயல் திறனை பாதிக்கும். பணியில் முழுமையான ஈடுபாட்டை வெளிப்படுத்த விடாமல் தடுக்கும். பணியிடத்தில் அலைச்சல் நிறைந்து காணப்படும் நிலையிலும், காதல் வாழ்க்கை மற்றும் மண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு நிதி நிலையில் ஏற்றம் காணும் ஒரு நாளாக இருக்கும். குறிப்பாக கல்வித் துறையில் இருக்கும் நபர்கள் தங்கள் துறையில் தலைவராக வளர்ந்து நிற்கும் வாய்ப்புகள் பெறுவார்கள்.
ஊழியர்களுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கும் சிறப்பான ஒரு காலமாக இன்றைய தினம் இருக்கும். பள்ளியின் சார்பில் போட்டி தேர்வு, திறனாய்வு தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் - போட்டிகளில் வெற்றி பெற்று தங்கள் பள்ளிக்கு பெருமை சேர்ப்பார்கள்.
தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில் பங்கெடுத்து, சிறந்த மதிப்பெண்களை குவித்து தங்கள் பள்ளியின் பெயரை உலகறிய செய்வார்கள். சிறு தொழில் முனைவோர்கள், தங்கள் தொழிலை விரிவு படுத்தும் வாய்ப்பை பெறுவார்கள். பணிக்காக சில பயணங்களையும் மேற்கொள்வார்கள்.
விருச்சிகம்
விருச்சக ராசியினரின் நிதி நிலையை பலப்படுத்தும் ஒரு தினமாக இன்றைய தினம் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் கிடைக்கும். ஏற்கனவே கிடைக்கும் வருமானத்தை, ஆக்கப்பூர்வமான வழிகளில் முதலீடு செய்து, அதன் வழியே லாபத்தை சம்பாதிக்கும் ஒரு தினமாகும் இன்று இருக்கும். தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட தடைகள் நீங்கும், புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும்.
உங்கள் தொடர்பாற்றல் திறன் மேம்படும்; பேச்சுத்திறனை பயன்படுத்தி புதிய தொழில் வாய்ப்புகளை பெறுவீர்கள், பெரிய ஒப்பந்தங்களை முடிப்பீர்கள். இதனிடையே காதல் வாழ்க்கைக்கும் போதுமான நேரத்தை ஒதுக்குவீர்கள். காதல் உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும், அதன் தாக்கம் உங்கள் தொழில் வாழ்க்கையில் பிரதிபலிக்கும்!
தனுசு
தனுசு ராசியினரின் அலைச்சல் மற்றும் பதற்றத்தை குறைத்து மன அமைதியை கொண்டு வரும் ஒரு தினமாக இன்றைய தினம் இருக்கும். குறிப்பாக, பணியிடத்தில் காணப்பட்ட பிரச்சனைகள் ஒவ்வொன்றாக இன்று முடிவுக்கு வரும். உங்களுக்கு தொந்தரவு அளித்து வந்த உயர் அதிகாரி தனது பணியை ராஜினாமா செய்வார்.
உங்கள் விருப்பத்திற்கு பொருத்தமான பணிவாய்ப்புகள் இன்று கிடைக்கும். சக ஊழியர்களின் உதவி உங்கள் முன்னேற்றத்தை உறுதி செய்யும், பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்கவும் உதவியாக இருக்கும். நிதி நிலையில் எதிர்பார்த்த மாற்றம் காணப்படும்; உங்களின் தனிப்பட்ட தேவை மற்றும் இல்லத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற பொருட்களை இன்று வாங்கிக் குவிப்பீர்கள்
மகரம்
மகர ராசியினருக்கு காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வரும் ஒரு தினமாக இன்றைய தினம் பார்க்கப்படுகிறது. நிதி நிலையில் எதிர்பார்த்த மாற்றங்கள் காணப்படும். நிதிநிலை சிறப்பாக இருக்க, உங்கள் காதல் துணையை மகிழ்விக்க சில ஆடம்பர செலவுகளை இன்று நீங்கள் செய்வீர்கள்.
காதல் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, பெற்றோரிடம் திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். குடும்ப வாழ்க்கையில் செலுத்தும் கவனத்தை, தொழில் வாழ்க்கையிலும் செலுத்துவார்கள். அந்த வகையில், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்துவீர்கள் அல்லது புதிய தொழிலை தொடங்குவீர்கள். முடிவு எதுவாக இருப்பினும் அது உங்களுக்கு சாதகமாக இருக்கும்!
கும்பம்
கும்ப ராசியினர் இன்றைய தினம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. குறிப்பாக தங்கள் பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அண்டை வீட்டாருடன் நிலத்தகராது ஏற்படலாம், நிலப் பிரச்சனைகள் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். வீட்டிற்குள் உங்கள் சகோதர உறவுகளுடன் வழக்குகளையும் உண்டாக்கலாம்.
காவல்துறை, நீதிமன்றம் மற்றும் பிற அரசு மற்றும் சட்டம் தொடர்பான விஷயங்களில் பணத்தை அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும். உங்கள் சேமிப்புகள் குறையும், அதனுடன் அலைச்சலும் அதிகரிக்கும். பொறுமையாக சிந்தித்து செயல்பட இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்!
மீனம்
மீன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த மகிழ்ச்சிகளை கொண்டு வரும் ஒரு தினமாக இருக்கும். குறிப்பாக சுற்றுலா மற்றும் பயணங்களில் ஆர்வம் கொண்ட மீன ராசியின் இருக்கு சிறப்பான அனுபவங்களை அளிக்கும் ஒரு தினமாக இன்று இருக்கும். பணிக்காக வெளிநாடு செல்ல விரும்பும் நபர்கள், இன்று அதற்கான பணிகளை தொடங்கலாம்.
உயர் கல்விக்காக காத்திருக்கும் நபர்களுக்கும் நல்ல செய்தி ஒன்று இன்று கிடைக்கும். இதனிடையே உங்கள் முன்னால் காதல் உறவை சந்திக்கும் ஒரு வாய்ப்பு இன்று கிடைக்கும். அவருடன் மீண்டும் காதல் உறவை தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து முடிவு செய்வது நல்லது!