Sep 13, 2025 - 08:59 AM -
0
இன்று (13) ஆவணி 28 திகதியில், கிரகங்களின் அமைப்பால் உருவாகக்கூடிய கெளரி யோகத்தால் கடகம், துலாம் உள்ளிட்ட ராசிகளுக்கு அற்புத பலன்கள் கிடைக்கும். சந்திரன் ரிஷபத்தில் பயணிக்கிறார். கன்னி ராசியில் உள்ள சித்திரை பின்பு சுவாதிக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷ ராசி பலன்
மேஷ ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் சில இடையூறுகள் சந்திக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் படிப்பு தொடர்பான சிரமங்களை சந்திப்பார்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்தவும். வண்டி, வாகன பயன்பாடுகளில் கவனம் தேவை. திருமண வாழ்க்கையில் ஒருவரை ஒருவ புரிந்து கொள்ள வேண்டிய நாள். உறவில் தேவையற்ற பதட்டங்கள் உருவாக்கும். உங்களின் நிதி நிலைமை வலுப்படுத்த வேலையில் கடின உழைப்பு தேவைப்படும். பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசிக்கு இன்று உங்கள் தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இன்று சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலில் இருக்கும். உங்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும். இன்று உங்கள் பேச்சை கட்டுப்படுத்தி செயலை அதிகரிக்க வேண்டிய நாள். இன்றும் உங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் நல்ல பலனை தரும். இன்று உங்களின் தடைப்பட்ட வேலைகள் முடிக்க முடியும். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். மாலை நேரத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் சில முக்கிய விஷயங்களை விவாதிப்பீர்கள்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசி சேர்ந்தவர்கள் உங்களை மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பு தொடர்பான முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். இன்று மாமியார் மூலம் கிடைக்கும். உங்களின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்காக சில முயற்சிகளை எடுப்பீர்கள். இன்று உடன் பிறந்தவர்களுடன் உறவு இனிமையாக இருக்கும். வணிகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். உங்களின் தடை பட்ட வேலை சரியாக முடிக்க முடியும். உங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியைச் சந்திப்பீர்கள். நண்பர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். நிதி நன்மை வலுவாக இருக்கும்.
கடக ராசி பலன்
கடக ராசி நண்பர்களுக்கு பழைய கடனிலிருந்து விடுபட வாய்ப்பு உண்டு. இன்று சில முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். தேர்வுக்காக மாணவர்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். இன்று உங்களின் தலைமைத்துவம் சிறப்பாக இருக்கும். ஆளுமை திறன் வெளிப்படும். இதன் காரணமாக க்க உங்களின் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உங்களின் செல்வ நிலை மற்றும் பதவி அதிகரிக்கும். இந்த உறவு விவாதத்தில் பங்கேற்பதை தவிர்க்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசி நண்பர்களுக்கு குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் பயணம் செல்ல வாய்ப்புகள் உண்டு. இன்று உங்களுக்கு மகிழ்ச்சியானதாகவும் லாபம் நிறைந்ததாகவும் இருக்கும். உங்கள் துணையின் முழு ஆதரவை பெறுவீர்கள். உங்களின் செல்வாக்கு மற்றும் மரியாதை அதிகரிக்கும். சொத்து தொடர்பான தகராறுகள் தீரும். இன்று உங்கள் வேலை தொடர்பாக எனக்கு முயற்சிகளை நல்ல பலன் கிடைக்கும். இன்று மாமியார் வீடு மூலம் ஆதரவும் பரிசுகளும் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த வெற்றி பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
இன்று உங்கள் வாழ்க்கையில் இனிமையான சூழல் இருக்கும். இன்று மதியத்திற்கு மேல் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க கூடிய நாள். உங்கள் வாழ்க்கைத் துணையின் நண்பன் ஆதரவும் கிடைக்கும். நிதி நிலை தொடர்பான முக்கிய முடிவுகளை தவிர்க்கவும். முடிந்தவரை நியமிக்க முயற்சிக்கவும். இன்று வெளி உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது அவசியம். சிலருக்கு வேலை கிடைக்க காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சமூக பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். இன்று நண்பர்களுக்கு உதவும் முன் வருவீர்கள். இன்று அனைவரையும் மரியாதையாக நடத்தவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் இன்று புதிய நபர்களுடன் பழகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று அரசியல் தொடர்பான துறையில் மேற்கொள்ளும் முயற்சிகள் நன்மை தரும். உங்கள் வேலை முன்னேற்றத்தால் மேலதிகாரிகளிடமிருந்து மரியாதை பெற வாய்ப்புகள் உண்டு. தொழில் செய்யக்கூடிய நபர்களுக்கு புதிய உரிமைகள் கிடைக்கும். உங்களின் மீது நிதிநிலை மற்றும் வருமானம் மேம்படும். அதே சமயம் உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். காதல் வாழ்க்கையில் சிறு பதட்டமான சூழல் இருக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு பிறரிடம் சிக்கி உள்ள பணம் மீட்டெடுக்க வாய்ப்புகள் உண்டு. உங்களின் ஆடம்பரத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதே போல தந்தையின் ஆதரவு உங்களுக்கு உதவியாக இருக்கும். வேலை தொடர்பாக நீங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். சில மதிப்பும் மிக்க பொருட்களை இழக்கவோ அல்லது திருடப்பட வாய்ப்பு உண்டு அதனால் கவனமாக செயல்படவும். குறிப்பாக பயணங்களில் கவனம் தேவை.. உங்கள் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். உடல் நலனில் அக்கறையே காட்டவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியை சேர்ந்தவர்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் மரியாதை அதிகரிக்கும். இன்று உங்களின் தொழில் தொடர்பாக சிலருடன் சேர்ந்து செயல்பட்டால் அதில் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த லாபம் பெற கடின உழைப்பு தேவைப்படும். இன்று உங்கள் உறவினர்களிடமிருந்து ஆதரவை பெறுவீர்கள். வெளியிடங்களில் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இன்று உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையை மேம்படும். பெரிய அளவில் முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும்.
மகர ராசி பலன்
மகர ராசியை சேர்ந்தவர்கள் இன்று விரும்பிய நற்பலன் கிடைக்கும். குறிப்பாக மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உங்கள் வேலை தொடர்பாக புதிய திட்டமிடலுடன் செயல்பட்டால் நல்ல வெற்றி கிடைக்கும். உங்கள் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற முடியும். இன்று உங்கள் பணியிடத்தில் சூழ்நிலை மேம்படும். வணிகத் திட்டங்களில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுது போக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்கள் எதிரிகளை தோற்கடிக்க முடியும். குடும்பத்தில் உள்ள ஒருவரிடம் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் மன அமைதி அதிகரிக்க கூடிய நாள்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசியை சேர்ந்தவர்கள் இன்று குழந்தைகள் எதிர்காலம் குறித்து அதிகம் சிந்திப்பீர்கள். அது தொடர்பாக சில நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் உறவு மேன்மை அடையும். வேலை தேடுபவர்களுக்கு இன்று பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று எந்த விதமான சண்டை சச்சரவுகள், விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். குறிப்பாக உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். பொருளாதார ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். உங்கள் துணை கொடுக்க கூடிய ஆலோசனை, திட்டங்கள் வெற்றியடையும். திருமண வாழ்க்கையில் சில சர்ச்சைகளை சந்திக்க நேரிடும்.
மீன ராசி பலன்
மீன ராசியை சேர்ந்தவர்கள் இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பருவ கால மாற்றத்தால் சில நோய் தொற்றுகள் ஏற்படும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு இனிமையாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக சில புதிய திட்டங்களை ஆராய்வீர்கள். இன்று வணிகத்துறையில் சந்தித்து வரும் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். இன்று உங்கள் வேலையில் எடுக்கும் முயற்சிகள் காண நல்ல பலனை பெறுவீர்கள். நிதி நன்மைகளை பெருகக்கூடிய நாள்.