Sep 16, 2025 - 09:11 AM -
0
இன்று (16) சுக்கிர ஆதித்திய யோகத்தால் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளும் தங்கள் வாழ்க்கையில் மகத்தான மாற்றங்களை சந்திக்க இருக்கின்றனர். அந்த வகையில் உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன் கிடைக்கும்? இன்று கிடைக்கும் பலன்களை அடிப்படையாக கொண்டு உங்கள் வாழ்க்கையை எப்படி திட்டமிடுவது? என சற்று விரிவாக இங்கு நாம் காணலாம்!
மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் காதல் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். காதல் உறவில் காணப்பட்ட மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தொழில் வளர்ச்சிக்கு உதவும் வாய்ப்புகளும் சில கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக காணப்பட்ட, தடைகள் நீங்கும், நிதி நிலை மேம்படும். உங்கள் விருப்பமான பொருட்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியினரின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வரும் ஒரு தினமாக இன்று அமையும். குடும்பத்தின் நிதி பிரச்சனைகள் சுமூகமான நிலைக்கு வரும், கடன் பிரச்சனைகள் தீரும் - குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்படும்.
பணியிடத்தில் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிட வேண்டாம், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் கவனம் செலுத்துங்கள், உங்கள் தனித்திறமைகளை நிரூபிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் கடின உழைப்பு உங்களுக்கான பலனை தேடி தரும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு வியாபாரத்தில் போதுமான வருமானம் கிடைக்கும் ஒரு தினமாக இன்று இருக்கும். நிதி நிலையில் எதிர்பார்த்த மாற்றம் காண்பீர்கள், உங்கள் விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்காலத்தை வளப்படுத்தும் சேமிப்பில் கவனம் செலுத்துங்கள், குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை துணைக்கு போதுமான நேரத்தை ஒதுக்குங்கள்.
கடகம்
கடக ராசியினரின் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வரும் ஒரு தினமாக இன்று இருக்கும். காதல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்ல விரும்பும் நபர்கள், தங்கள் நண்பர்கள் உதவியுடன் விரைவில் திருமணத்தை முடிப்பார்கள்.
பெற்றோர் ஆதரவு மற்றும் உடன் பிறந்தவர்களின் ஆதரவையும் பெறுவார்கள். தொழில் வாழ்க்கையில் உயர்வு காணும் வகையில் சில வாய்ப்புகள் இன்று கிடைக்கும். வருமானம் பெருகும், சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும் உயரும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு அடிப்படையில் இன்றைய தினம் சவால்கள் நிறைந்த ஒரு தினமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும், உங்கள் கடமைகளை செய்து முடிப்பதில் கால தாமதம் நீடிக்கும். உங்கள் மனதில் இனம் புரியாத ஒரு பயம் இருந்துக் கொண்டே இருக்கும்.
கடினமாக உழையுங்கள், நேர்மறையாக சிந்தியுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பலனை இன்றைய கிரக நிலை பலன்கள் உங்களுக்கு அளிக்கும், வாழ்க்கை சிறப்பாக மாறும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
கன்னி
கன்னி ராசியினர் தங்கள் தொழில் வாழ்க்கையில் ஏற்றம் காண உதவும் பல வாய்ப்புகளை இன்று பெறுவார்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.
உங்கள் பேச்சாற்றலை பயன்படுத்தி, புதிய ஒப்பந்தங்களை முடிப்பீர்கள், பெரிய ஆர்டர்களை பெறுவீர்கள், தொழிலை அடுத்த நகரத்திற்கும் விரிவுப்படுத்துவீர்கள். கூட்டாண்மையில் தொழில் செய்யும் நபர்கள், கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
துலாம்
துலாம் ராசியினரின் வருமானம் இரட்டிப்பாகும் ஒரு தினமாக இன்று அமையும். ஏற்கனவே செய்து வரும் தொழிலில் போதுமான வருமானம் கிடைப்பதோடு, இரண்டாவது வருமானத்தை உண்டாக்கும் வழிகளும் கிடைக்கும். பூர்வீக சொத்து வழியே வருமானங்கள் கிடைக்கும், கிராமத்து நிலம் உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்தும். நிலத்தில் முதலீடு செய்த நபர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும் ஒரு தினமாகவும் இன்று அமையும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் இன்றைய தினம் தங்கள் பள்ளி கால நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. பழைய நண்பர்களை மட்டும் அல்ல, முன்னாள் காதல் உறவை சந்திக்கும் வாய்ப்பும் காணப்படுகிறது. தங்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் காணப்படும் பிரச்சனைகளுக்கு நண்பர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும்.
நிதி பிரச்சனைகளை சமாளிக்கவும் அவர்கள் உதவி செய்வார்கள். இதனிடையே உங்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளும் தலைதூக்கலாம். எனவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
தனுசு
தனுசு ராசியினரின் வாழ்க்கையில் அன்பும், காதலும் அதிகரிக்கும் ஒரு தினமாக இன்று இருக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு, உங்கள் தொழில் வாழ்க்கையில் காணப்படும் நிதி பிரச்சனைகளை சமாளிக்க உதவியாக இருக்கும். புதிய வருமானத்தை உண்டாக்கும் வழிகளும் இங்கு காணப்படுகிறது.
பொருளாதார நிலை உங்களுக்கு ஆதரவாக இருக்கும் நிலையிலும், சிக்கனமாக செலவு செய்வது நல்லது. இன்றைய தினம் ஆடம்பர செலவுகளை தவிர்த்திடுங்கள், அறிமுகம் இல்லா விஷயத்தில் முதலீடு செய்வதையும் தவிர்திடுங்கள்.
மகரம்
மகர ராசியினருக்கு இன்றைய தினம் கடின உழைப்பால் வெற்றி காணும் ஒரு தினமாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் ஏற்றம் கொண்டு வரும் வாய்ப்புகள் பல கிடைக்கும். மகர ராசி கொண்ட மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் சிறந்த மாணவர் என பெயர் எடுப்பார்கள். குழந்தைகள் வழியே பெற்றோருக்கும் ஒரு நல்ல செய்தி கிடைக்கும்.
ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும், குல தெய்வ கோயில் வழிபாடு உங்கள் கவனத்தை ஈர்க்கும். பெற்றோர் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
கும்பம்
கும்ப ராசியினரின் தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட தடைகள் நீங்கும் ஒரு சிறப்பு தினமாக இன்று அமையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும், தம்பதியரிடையே காணப்பட்ட மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக உறவை உண்டாக்க முயற்சி செய்யுங்கள்.
பணிகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள், ஒன்றாக இணைந்து முன்னேறுங்கள். நண்பர்களின் ஆதரவு உங்கள் தொழில் வளர்ச்சி மற்றும், தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வர உதவியாக இருக்கும்.
மீனம்
மீன ராசியினருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி கொண்டு வரும் ஒரு சிறப்பு தினமாக இன்று இருக்கும். குறிப்பாக, காதல் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும், புதிய வழிகளில் நிதி ஆதாயம் கிடைக்கும். மன நடவடிக்கைகளில் மும்முரமாக இருப்பீர்கள்.
இதனிடையே உங்கள் பள்ளி கால நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். தாயின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் காணப்படும், தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் இலக்கை நோக்கி தைரியமாக ஒரு அடி முன் வைத்துச் செல்லுங்கள். முடிவுகள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.