Sep 18, 2025 - 06:29 AM -
0
இன்று (18) (புரட்டாசி மாதம் 2) சந்திர பகவான் கடக ராசியில் பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் கூடிய தினத்தில். தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று மகாளய பட்சம் 12 ஆம் திகதி துவாதசி திதியில் தர்ப்பணம் கொடுக்க பொருளாதாரம் உயரும்.
மேஷம் ராசிபலன்
மேஷ ராசி பிறந்தவர்களுக்கு இன்று குழந்தைகளிடமிருந்து சில ஏமாற்றம் அளிக்கும் செய்திகள் பெறுவீர்கள். இது உங்களுக்கு மனக் கவலையைத் தரும். அதிலிருந்து சில அனுபவத்தை கற்றுக்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் புதிய விஷயங்களை, பாடங்களை கற்றுக் கொள்ள ஆர்வப்படுவீர்கள். சில நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை இன்று முடிக்க முடியும். இன்று இரவு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். தேர்வுக்காக தயாராக கூடிய மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். இன்று உங்கள் குடும்பத் தொழிலில் தந்தையின் ஆலோசனை நல்ல வாய்ப்புகளை பெற்றுத் தரும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக கவலைகள் அதிகரிக்கும். இருப்பினும் உங்களின் நிதானமான செயல்பாடு மற்றும் சேமிக்கும் எண்ணத்தால் அதிலிருந்து நிவாரணம் பெற முடியும். இன்று உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் தந்தை மற்றும் உடன் பிறந்தவர்களின் ஆதரவு பெறுவீர்கள். நிதி நிலை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். புதிய யோசனைகள் மனதில் தோன்றும். அதனால் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவீர்கள்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு விலைமதிப்பற்ற பொருட்கள் கவனமாக பாதுகாப்பது அவசியம். உங்கள் வேலை நீண்ட நாட்களாக தாமதப்பட்டு வந்த உங்களின் சில வேலைகளை முடிக்க முடியும். இதனால் மனதில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். இன்று குடும்பத்தினருடன் ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழிலதிபர்களுக்கு இன்று உங்கள் தொழிலை முன்னேற்றுவதற்கான அல்லது விரிவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அதற்காக கடினமாக உழைப்பீர்கள்.பரபரப்பான நாளுக்கு மத்தியில் உங்கள் காதல் வாழ்க்கைக்காக நேரத்தை ஒதுக்குவது நல்லது.
கடக ராசி பலன்
கடக ராசி சேர்ந்தவர்கள் பணியிடத்தில் நல்ல செய்திகளை பெறுவார்கள். உங்கள் வணிகம் தொடர்பாக நல்ல சூழல் நிலவும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் பெற வாய்ப்பு உண்டு. உங்கள் குழந்தைகளின் பொறுப்புக்கள் நிறைவேற வாய்ப்பு உண்டு. வீட்டில் இருந்து வேலை செய்யக்கூடியவர்களுக்கு ஊழல் சாதகமாக இருக்கும். கலைத்துறை மற்றும் சமூக பணிகளில் ஈடுபடக்கூடிய நபர்களுக்கு அரசு மரியாதை அல்லது பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலை அல்லது குடும்ப பொறுப்பு தொடர்பான பயணம் மிகவும் நல்ல பலனை தரக்கூடியதாக அமையும். இன்று உங்கள் நண்பர்களுடன் உல்லாசமாக நேரத்தை கழிக்க வாய்ப்பு கிடைக்கும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் மரியாதை அதிகரிக்கும். உங்களின் திட்டமிட்ட செயல்பாடுகள் வேலையை வேகமாக முடிக்க உதவும் என்பதால், அது மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று உங்கள் மனக்குழப்பத்தைத் தவிர்ப்பது நல்லது. வேலை தொடர்பாக எதிரிகள் தொந்தரவு செய்ய முயல்வார்கள். இன்று பிறரிடம் பேசுவதை குறைப்பது நல்லது. பேச்சில் நிதானம் மற்றும் செயலில் வேகத்தை காட்டுவது நல்லது. காதல் வாழ்க்கையில் துணைக்கு பரிசு கொடுக்க நினைப்பீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு, நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல லாபம் கிடைக்கும். சட்ட போராட்டத்தில் உள்ளவர்கள், அதை பேசி தீர்க்க முயற்சி செய்யவும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக யோசனை அதிகரிக்கும். அவர்களுக்காக முதலீடு திட்டங்களில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களின் மனம் மகிழ்ச்சியாக நிரம்பி இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் அதற்காக அதிகமாக செலவிடுவீர்கள். உங்களின் புகழ் அதிகரிக்க கூடிய நாள். தாயின் அன்பு ஆசீர்வாதமும் பெறுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி பிறந்தவர்களுக்கு குடும்பத்தினருடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். பல நாட்களாக இருக்கும் பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். இன்று பிறரிடம் பெரிய பணப்பரிவதில்லை தவிர்க்கவும். இன்று உங்கள் செயல்பாடுகள் மகிழ்ச்சியை தரும். பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். காதல் வாழ்க்கையில் இணக்கமான சூழல் இருக்கும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிப்பாக மூச்சு விடும் பிரச்சினை, சிறுநீரகம் தொற்று போன்ற பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உண்டு. அதனால் சிறிய உடல்நலம் பிரச்சினைகளை கூட மருத்துவர் அணுகுவது நல்லது. குடும்பத்தில் சமநிலையை பராமரிக்க முயலவும். பிறரிடம் இணக்கமாக நடந்து கொள்ளவும். மாலை நேரத்தில் சில நல்ல செய்திகள் தேடி வரும். பணியிடத்தில் உங்கள் எதிரிகள் வேலையை தடை ஏற்படுத்தும் விதமாக தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. சில முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று மாமியார் வீடு மூலம் நிதி நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று யார் என் கண்மூடித்தனமாக நம்புவதை தவிர்க்கவும். இல்லையெனில் நஷ்டத்தை சந்திப்பீர்கள். இன்று மாலை நேரத்தில் ஆன்மீகம் உள்ளது சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இனிமையான அனுபவமும் கிடைக்கும். வேலையில் பெண் நண்பர்களின் ஆதரவு மன மகிழ்ச்சியை தரும்.
மகர ராசி பலன்
மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று எந்த விதமான வாக்குவாதம் மற்றும் சந்தையில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இது உங்களுக்கு தீங்கு விளைவிப்பதாக அமையும். இன்று குடும்பம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் லாபம் தரும். புதிய வாய்ப்புகள் அமையும். குடும்பத் தொழிலில் கடின உழைப்பு தேவைப்படும். பணியிடத்தில் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கவும், வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு.
கும்ப ராசி பலன்
கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு சாதகம் மற்ற சில செய்திகள் கிடைக்கும். இன்று பயணம் செல்ல நேரிடும்.பயணங்கள் செல்லும்போது உங்கள் உடமைகள் மற்றும் உடல ஆரோக்கியத்தை பராமரிக்கவும். இன்று உங்கள் பேச்சில் மென்மையை கடைப்பிடிப்பது மிகப்பெரிய பிரச்சினைகளை கூட எளிதாக தீர்க்க முடியும். இன்று உங்கள் துணையின் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். அதற்காக அதிகமாக செலவிட நேரிடும்.
மீன ராசி பலன்
மீன ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் பிள்ளைகளின் வேலை அல்லது தொழில் தொடர்பான கவலைகள் ஏற்படும். நிதானமாக செயல்படுவது நல்லது. இன்று உங்களின் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீர்க்க முடியும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்று உங்கள் வீட்டில் சில சுப காரியங்கள் செய்ய முயற்சி செய்தீர்கள். உங்கள் செல்வங்களை கட்டுப்படுத்த வேண்டிய நாள். நிதி நிலை இன்று பலவீனமாக இருக்கும்.