Jan 1, 2026 - 09:28 AM -
0
எவ்வளவு சோர்வான நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் அந்நிலையில் இருந்து வெளியே வரும் மணவலிமைக் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே!
இந்த வாரம் பண வரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும்.
கலைத்துறையினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். அரசியல்துறையினருக்கு வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
1 ஆம் திகதியில் பிறந்தவர்கள் நரசிம்மருக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும்.
(இது 1.1.2026 முதல் 7.1.2026 வரையான காலப்பகுதிக்கானது...)

