Jan 13, 2026 - 02:49 PM -
0
2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடக்கிறது. இதனால், 12 ராசிகளுக்கும் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. சில ராசிகளுக்கு எதிர்மறையான ஆற்றலையும், சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலையும் ஏற்படுத்தும்.
இந்த நிலையில் பொங்கலுக்கு பிறகு வரும் ஜனவரி 18 ஆம் திகதி செவ்வாய் மற்றும் சந்திரன் ஒன்றிணைகிறது. இதனால், மகர ராசியில் மகாலட்சுமி யோகம் உருவாகுகிறது. இந்த மகாலட்சுமி ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, சில ராசிகளுக்கு வருமானம் அதிகரித்து, கடன் பிரச்னை தீரும் என கூறப்பட்டுள்ளது.
மேஷம்
2026 ஆம் ஆண்டு உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்களளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மகாலட்சுமியின் அருளால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக, தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் உங்களது பணிகள் முடிவடைகிறது. கூட்டுத் தொழில் செய்வர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும், நிதி பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு மகாலட்சுமியின் அருளால் உங்களது பிரச்னை முடிவுக்கு வரும். எனவே, 2026 ஆம் ஆண்டு முழுவதும் சிறப்பானதாகவும் உங்களுக்கு இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் நன்மை பயக்கும். மகாலட்சுமி ராஜயோகம் ரிஷப ராசியின் ஒன்பதாவது வீட்டில் ஏற்படுகிறது. இதன் காரணமாக, இந்த நேரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும். மேலும், வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. ரிஷப ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி யோகத்தால் 2026 ஆம் ஆண்டு முழுவதும் மங்களகரமாக இருக்கும். தொழிலில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், ஊதிய உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. மகாலட்சுமியின் அருளால் நிதி நிலைமை மிகவும் மேம்படும்.
தனுசு
தனுசு ராசிக்கு மகாலட்சுமி ராஜயோகம் நேர்மறையான ஆற்றலை அளிக்கும். தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால், எதிர்பாராத நிதி ஆதாயங்களை பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். இதனால், அதிக பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் வரும். கடன் பிரச்னைகளுக்கு 2026 ஆம் ஆண்டு முதல் தீரும். தொழிலில் அதிகப்படியான லாபத்தை பெறுவீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் செழிப்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வேலை சம்பந்தமாக வெளிநாடு பயணம் செய்யும் வாய்ப்புகள் உள்ளன.

