Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank

ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் (30.09.2026)!

Sep 30, 2026 - 09:27 AM -

0

இன்றைய ராசிப்பலன் (30.09.2026)!

இன்று (30) மேஷ ராசியின் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சித்த, அமிர்த யோகம் உள்ள தினத்தில் கன்னி ராசியை சேர்ந்த அஸ்தம், சித்திரை நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். இன்று துலாம் ராசியில் சுக்ரன் ஆட்சி பெற்றும், புதனும் சேர்ந்து சஞ்சரிக்கின்றனர். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கு நன்மைகள் அதிகம் நடக்கும். இன்று கிருத்திகை சதுர்த்தி. முருகன் வழிபடும் நாள். 

மேஷம் ராசி பலன் 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் விலக வாய்ப்பு உண்டு. எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகளை தேடிவரும். சில முக்கிய வேலை அல்லது விபரங்களை மறக்க வாய்ப்பு உண்டு. இதனால் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்களுக்கு வர வேண்டிய தன வரவில் இருந்த தாமதம் விலகும். புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். முதலீடு சார்ந்த உங்களுடைய எண்ணங்கள் மேம்படும். குடும்பம் மற்றும் சமூகத்தில் உங்களுடைய பெருந்தன்மையான செயல்களால் மதிப்பு உயரும். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய செயல்பாடுகளில் ஒருவித சோர்வு இருக்கும். ஆரோக்கியத்தையும், உங்களுடைய ஆற்றலையும் பராமரிக்க வேண்டிய நாள். மனதில் சில மறைமுக பிரச்சனைகள் தோன்றி மறையும். இன்று அவசரமாக செயல்படுவதை விட, உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படவும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு விலக்கி அனுசரித்து செயல்படவும். உங்களுடைய சூழ்நிலைகளை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டிய நாள். நிதிநிலை ரீதியாக ஏற்ற இறக்கங்கள் இருக்கும். 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பழமையான பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். உங்களுடைய வருமானம் சீராக இருந்தாலும், உங்களுடைய செலவுக்கு அதிகரிக்கும். விரய ஸ்தானத்தில் சந்திரனின் சஞ்சாரம் உங்களுக்கு மன குழப்பத்தை தர வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய உடல் நலம் மற்றும் வாழ்க்கை துணையின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிய நாள். இல்ல குடும்ப விவகாரங்கள், திட்டங்கள் செயல்படுத்துவதில் நிதானம் தேவை. நண்பர்கள், உறவினர்களின் ஆதரவை பெறுவீர்கள். 

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று பயனுள்ள நாளாக இருக்கும். சந்திரனின் உச்ச நிலை காரணமாக உன்னுடைய மன உறுதி அதிகரிக்கும். தொழில், வேலை தொடர்பாக பணியிடத்தில் வெற்றி காண்பீர்கள். அரசு தொடர்பான பணிகள் சரியாக நடக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவும். உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலை, உங்கள் உறவில் பரஸ்பர அன்பும், நல்லிணக்கத்தையும் கடைபிடிக்கவும். 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்களுடைய தனஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும், சந்திரன் கர்ம ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுடைய தொழில், வேலை தொடர்பான பணிகள் வேகம் அடையும். நாளின் பிற்பகுதியில் வருமானம் அதிகரிக்கும். தந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அரசு தொடர்பான திட்டங்கள் மூலம் பயனடைவீர்கள். சமூகத்தில் உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மூலம் ஆதரவும், வாய்ப்புகளும் கிடைக்கலாம். இன்று எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். குடும்ப பொறுப்புகள், வேலை தொடர்பாக நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சில பணிகள் முடிக்க முடியும். இன்று உங்களுடைய நண்பர்கள், உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிலருக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று குடும்பத்தினருடன் புனித ஸ்தலத்திற்கு பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சில நல்ல மாற்றம் கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உங்களுடைய மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். நாளின் முதல் பாதியில், மகிழ்ச்சியும், லாபமும் கிடைக்கக்கூடியதாகவும், பிற்பகுதியில் கடின உழைப்பு தேவைப்படக்கூடியதாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்பு உண்டு. உங்களுடைய ராசியில் சுக்கிரன் - புதனின் சேர்க்கை வருமான சிக்கலை தீர்க்கும். அதே சமயம் எதிர்பாராத செலவுகள் சந்திக்க நேரிடும். உங்களுடைய உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். வேலை தொடர்பாக முன்வரமாக செயல்பட வேண்டிய நாள். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும். உத்யோகம் செய்யக்கூடியவர்களுக்கு பணி சூழ்நிலை மேம்படும். உங்களுக்கு சில புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும். உங்களுடைய துணிச்சலான முடிவுகள், அனுபவமிக்க செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையும், மரியாதையை உயர்த்தும். உங்களுடைய கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்ய, சேமிக்க திட்டமிடவும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு நம்பிக்கை தரும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று அஷ்டம ஸ்தானத்தில் குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை தேவையற்ற மன குழப்பம், கோபத்தை தர வாய்ப்பு உண்டு. இன்று எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பதும், ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டிய நாளாக இருக்கும். சுப காரியம் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் செய்யக்கூடியவர்கள் பணியிடத்தில் சில நெருக்கடிகள் சந்திக்க நேரிடலாம். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வியாபார விஷயங்களிலும், முடிவுகளிலும் நிதானத்துடன் செயல்படவும். மனதில் இருந்த கவலைகள் குறையும். 

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு மாதத்தின் கடைசி நாளான இன்று, இனிமையான மற்றும் மங்களகரமான பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். உற்சாகம் மட்டும் சில வேலைகளில் ஈடுபடுபீர்கள். பணம் வரவும் மகிழ்ச்சியும் அதிகரிக்க கூடிய நாள். பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும். சந்திரனின் நகர்வு உங்களுடைய மனதில் மகிழ்ச்சியை தரும். உங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதுவிதமான சிந்தனை மனதில் பிறக்கும். உங்கள் துணை மற்றும் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். 

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நிதானமான செயல்பாடு மற்றும் புத்திசாலித்தனம் நல்ல பலனை தரும். புதுமையான தொழில்நுட்பம் பயன்படுத்துவது மற்றும் செயல்களில் ஈடுபட விரும்புவீர்கள். பொறியியல் மற்றும் ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். லாபகரமான வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். உங்களுடைய இலக்குகளை அடைய முடியும். வாழ்க்கை துணையின் உதவியால் வீட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கவும், முக்கிய வீட்டு வேலைகளை முடிக்கவும் வாய்ப்பு உண்டு. தந்தையிடமிருந்து நன்மையும் ஆதரவும் கிடைக்கும். 

மீனம் ராசி பலன் 

மீன ராசி அன்பர்களுக்கு இன்று எதிரிகளையும், எதிர்ப்புகளையும் சாதுரியமாக எதிர்கொண்டு வெற்றியடைவீர்கள். நீங்கள் செய்யக்கூடிய வேலை, வியாபாரத்தில் சக நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் செயல்களில் இருந்த தடைகள் நீங்கும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். புதிய தொழில்நுட்ப அம்சங்களில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் மனதில் இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்கள் விலகி, உங்களுக்கு எதையும் செய்து முடிக்க முடியும் இன்று நம்பிக்கை மனதில் ஏற்படும். கல்வி, விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள்.


MOST READ

காணொளி
மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

Mobitel 1278

ஷோர்ட்ஸ்
மன்னார் மடு தேவாலய வீதியில் உலாவும் 2 சிறுத்தை புலிகள்!

மன்னார் மடு தேவாலய வீதியில் உலாவும் 2 சிறுத்தை புலிகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

வட்டவளையில் சிறுத்தை புலி நடமாட்டம்!

வட்டவளையில் சிறுத்தை புலி நடமாட்டம்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

விஜயன் அரசு கூட இந்தியாவில் இருந்துதானே வந்தது!

விஜயன் அரசு கூட இந்தியாவில் இருந்துதானே வந்தது!

தமிழ் பேசும் மக்கள் யாரும் அனோஜனுக்கு ஏதிராக இல்லை!

தமிழ் பேசும் மக்கள் யாரும் அனோஜனுக்கு ஏதிராக இல்லை!

அனோஜனை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம்!

அனோஜனை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம்!

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?