Sep 30, 2026 - 10:04 PM

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில் தனது 2 ஆவது இரட்டை சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில், 117 பந்துகளில் 24 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 200 ஓட்டங்களை எட்டி இந்த சாதனை மைல்கல்லை அடைந்தார்.
இதற்கு முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் தனது முதலாவது இரட்டை சதத்தை (208 ஓட்டங்கள்) விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.































