threads

செய்திகள் 24 மணி நேரமும் இங்கே...


சுருக்கம்

உலகளாவிய ரீதியில் நடக்கும் செய்திகளை 24 மணி நேரமும் உடனுக்குடன் வழங்கும் அத தெரண தமிழ் செய்திகளின் சகல முக்கியச் செய்திகளும் இங்கே...

LIVE NEWS
218 Updates
2 hours ago

மத்திய கிழக்கு போர் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் - மஹிந்த

March 2, 2026 - 06:51 PM

threads

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இன்று (02) ஹோமாகம வரலாற்றுச் சிறப்புமிக்க இம்புலகந்த ஸ்ரீ சம்புத்தி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

யுத்தத்தை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முடிக்க வேண்டும். 

ஏனைய வல்லரசு நாடுகள் இதில் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என அவர் குறிப்பிட்டார். 

இதன்போது, கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பிலும் மஹிந்த ராஜபக்ஷ தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

 

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவி ... see more

3 hours ago

ட்ரம்பின் செயற்பாட்டை ஏற்க முடியாது - ரணில்

March 2, 2026 - 05:11 PM

threads

பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுக்கும் தாக்குதல்கள் குறித்து இன்று (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் தலைமையை அகற்ற முயற்சிக்கிறார். 

ஒரு அரசாங்கத்தை அகற்றுவதாக இருந்தால் இந்த வன்முறை வழிமுறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளுக்கு முரணானது என சுவிட்சர்லாந்தும் நோர்வேயும் சுட்டிக்காட்டியுள்ளன. 

இந்த விவகாரம் மிகவும் பாரதூரமானது என்றும், இவ்வாறான உலக அரசியல் போக்குகள் இலங்கைக்குச் சாதகமானவை அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார். 

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் மட்டும் இலங்கையில் பெரிய தட்டுப்பாடு ஏற்படாது, ஏனெனில் ஏனைய நாடுகள் அதிக எண்ணெயை உற்பத்தி செய்கின்றன. 
... see more

4 hours ago

மத்திய கிழக்கு விமானப் பயணங்கள் நள்ளிரவு வரை ரத்து

March 2, 2026 - 04:59 PM

threads

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, அந்த வான்பரப்பைத் தவிர ஏனைய அனைத்து வான்வழிப் பயணங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 

சில வான்பரப்புகள் வரையறுக்கப்பட்ட விமானப் பயணங்களுக்கு மாத்திரமே தற்போது திறக்கப்பட்டுள்ளன. 

மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானப் பயணங்களும் இன்று (02) நள்ளிரவு 12 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இன்றைய இரவின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கப்படும். 

பல்வேறு வெளிநாட்டு விமான நிலையங்களில் சிக்கியுள்ள இலங்கையர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தங்கியுள்ள பயணிகளுக்கு விசா உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 

இலங்கைக்கு வரவிருந்த கப்பல்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு வருவதற்கு அனுமதி கோரியுள் ... see more

5 hours ago

TIN இலக்கம் கட்டாயமாகிறது!

March 2, 2026 - 03:46 PM

threads

தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்) சமர்ப்பிக்கப்படுவது அவசியமாகும். 

அதன்படி, பின்வரும் சேவைகளுக்கு இச்சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளது, 

ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல். 

கட்டிட வரைபடங்களுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல். 

மோட்டார் வாகனப் பதிவு மற்றும் வாகன அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல். 

காணி அல்லது காணி உரிமத்தைப் பதிவு செய்தல். 

வணிகப் பதிவுகளை மேற்கொள்ளுதல். 

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றுதல். 

கடன் அட்டைகளை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் கட்டாயம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

7 hours ago

Big Match கொண்டாட்டங்கள்: பொலிஸார் விசேட அறிவிப்பு!

March 2, 2026 - 02:10 PM

threads

பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.


இந்த வருடாந்தப் போட்டிகளில் பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொள்கின்றனர். இதன்போது கலந்துகொள்பவர்களின் ஒழுக்கம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் காலப்பகுதியாக இது அமைவதுடன், இது பாடசாலையின் கௌரவத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இதற்கமைய, பிக் மேட்ச் நடைபெறும் காலப்பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் விசேடமாகப் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்களைப் பொலிஸார் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளனர்:


மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள்:


பாடசாலையின் கௌரவம் பாதிக்கப்படாதவாறு பொது இடங்களில் கண்ணியமாக நடந்துகொள்ளுதல்.


பொதுமக்களு ... see more

11 hours ago

ஈரானில் அமெரிக்காவின் அதிரடி: 1,000 இலக்குகள் மீது தாக்குதல்!

March 2, 2026 - 09:13 AM

threads

ஈரானுக்கு எதிரான தாக்குதலில், முதல் 24 மணிநேரத்திற்குள் ஈரானின் 1,000 இற்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

'ஒபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் முதல் 24 மணிநேரத் தாக்குதல்களுக்கு, ரேடார் கண்களில் சிக்காத அதிநவீன குண்டுவீச்சு விமானங்கள், ட்ரோன்கள், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

ஈரானின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், பெலிஸ்டிக் ஏவுகணைத் தளங்கள் மற்றும் ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகரக் காவற்படையின் கூட்டுத் தலைமையகம் ஆகியன இந்தத் தாக்குதல்களின் பிரதான இலக்குகளி ... see more

12 hours ago

'ஆரோக்யா' திட்டத்தைப் புறக்கணித்தது GMOA!

March 2, 2026 - 08:14 AM

threads
1 day ago

மத்திய கிழக்கு நெருக்கடியும் இலங்கைக்கான தாக்கமும்

March 1, 2026 - 05:30 PM

threads

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலை இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து, அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார். 

உலகின் தினசரி எண்ணெய் உற்பத்தி 100 மில்லியன் பீப்பாய்களாகக் காணப்படும் நிலையில், இதில் 20% மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே உற்பத்தி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த உற்பத்திக்குத் தடை ஏற்படும் பட்சத்தில், உலகப் பொருளாதாரத்தில் அதன் தாக்கமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த டியூடர் வீரசிங்க: 

"நமது தேயிலை ஈரானுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரபு நாடுகளுக்கும் ஏனைய ஏற்றுமதிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில், இந்தப் போரின் காரணமாக அந்த வர்த்தக நடவடிக்கைகள் முடங்கக் கூடும். ஏற்கனவே நாடுகளுக்கு இடையிலான பல விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலைமையானது உலகப் பொருளாதாரத்தில ... see more


காணொளி
சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு!

எதிர்க்கட்சியினரின் கதை இத்தோடு முடிந்துவிடும்!

எதிர்க்கட்சியினரின் கதை இத்தோடு முடிந்துவிடும்!

தலவாக்கலை நகரில் நகை கடையில் நூதன திருட்டு

தலவாக்கலை நகரில் நகை கடையில் நூதன திருட்டு


ஸ்ஷோட்ஸ்
சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

கொக்கட்டிச்சோலை குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை!

கொக்கட்டிச்சோலை குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை!

நகைக்கடையில் நூதன முறையில் திருடிய நபர் கைது!

நகைக்கடையில் நூதன முறையில் திருடிய நபர் கைது!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு!

எதிர்க்கட்சியினரின் கதை இத்தோடு முடிந்துவிடும்!

எதிர்க்கட்சியினரின் கதை இத்தோடு முடிந்துவிடும்!

தலவாக்கலை நகரில் நகை கடையில் நூதன திருட்டு

தலவாக்கலை நகரில் நகை கடையில் நூதன திருட்டு