Feb 19, 2025 - 05:17 PM -
0
'கனேமுல்ல சஞ்சீவ' என்ற சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், தற்போது சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபர் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், இன்று (19) காலை பூஸா சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் பாதுகாப்பிற்காக சிறைச்சாலை அதிகாரிகளுடன், 12 விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
அதேநேரம் சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ ஒன்று வௌியாகியுள்ளது.

