செய்திகள்
பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

Mar 12, 2025 - 09:54 AM -

0

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர் கல்னேவ பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டதோடு, அவரைத் தேடுவதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.  

இந்த சம்பவத்தின் அடிப்படையில், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி வைத்தியர்கள் உட்பட அனைத்து சுகாதார ஊழியர்களும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர், 

அத்தோடு, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (12) நாடளாவிய ரீதியாக வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

இதேவேளை, இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05