Mar 12, 2025 - 10:32 PM -
0
மித்தெனிய முக்கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (12) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்தெனிய பகுதியில் இடம்பெற்ற முக்கொலைக்கு உதவியதற்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதுடைய குறித்த சந்தேகநபர் டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில், விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

