செய்திகள்
கிழக்கு பல்கலை உபவேந்தர் கடத்தல் தொடர்பாகவே பிள்ளையான் கைது

Apr 9, 2025 - 11:14 AM -

0

கிழக்கு பல்கலை உபவேந்தர் கடத்தல் தொடர்பாகவே பிள்ளையான் கைது

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து நேற்று (08) இரவு பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார். 

கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ம் திகதி உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில், அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05