செய்திகள்
கொரியாவில் வெண்கலப் பதக்கம் வென்ற காலிங்க

May 28, 2025 - 02:52 PM -

0

கொரியாவில் வெண்கலப் பதக்கம் வென்ற காலிங்க

தென் கொரியாவில் இடம்பெறும் 26வது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இன்று (28) நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 

அவர் இந்த ஓட்டப்போட்டியை 45.55 வினாடிகளில் முடித்துள்ளார். 

கட்டாரின் அமர் இப்ராஹிம் 45.33 வினாடிகளில் ஓடி இந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 

இந்த போட்டியில் ஜப்பானின் கென்டாரோ சாடோ 45.50 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றார். 

நேற்று (27) தொடங்கிய இந்த செம்பியன்ஷிப் போட்டி 31 ஆம் திகதி வரை தென் கொரியாவின் குமியில் இடம்பெறவுள்ளது. 

1973 இல் தொடங்கிய இந்த செம்பியன்ஷிப் போட்டியை தென் கொரியா நடத்துவது இது மூன்றாவது முறையாகும். 

அந்த நாடு இதற்கு முன்பு 1975 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் இந்த போட்டியை நடத்தியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05