Oct 9, 2026 - 12:24 PM

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (9) காலை சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் இரு கட்சிகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ரமேஷ் பத்திரண, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் இதில் பங்கேற்றனர்.


































