Oct 10, 2026 - 05:42 PM

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 29 ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் காரொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேன் ஒன்றின் பின்புறத்தில் கார் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார், அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
எனினும், இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலைப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார், வீதியில் கவிழ்ந்த காரை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர்செய்ய நடவடிக்கை எடுத்தனர்.


































