Oct 10, 2026 - 07:16 PM

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுவிக்க வலியுறுத்தியும் இன்று (10) முற்பகல் கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணத்தின் முதல் நாள் பயணம் கடுகன்னாவ பகுதியை வந்தடைந்து நிறைவு பெற்றுள்ளது.
மகா சங்கத்தினர் 6 நாட்கள் தொடர்ச்சியாகப் பாதயாத்திரையாகக் கொழும்பு வரை விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரின் விடுதலைக்காக, கண்டி தலதா மாளிகையில் இன்று முற்பகல் விசேட பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது.
மிஹிந்தலை ராஜமகா விகாராதிபதி வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர், உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட ஏராளமான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.


































