Oct 14, 2026 - 08:42 AM

சிறை தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யக் கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடை பேரணி இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று (14) நிட்டம்புவ நகரத்தில் ஆரம்பமாகும் இந்த நடைபயணம் கடவத்தை நகரம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக உலபனே சுமலங்க தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த நடை பேரணி கடந்த 10 ஆம் திகதி கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஆரம்பமானது.
இந்நிலையில், நாளை (15) இந்நடப்பயணம் கொழும்பை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
































