Oct 14, 2026 - 10:08 AM

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றும் (14) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்முதல் செய்ததில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணைகளுக்காவே அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினமும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வேறு ஒரு வழக்கிற்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
































