Oct 14, 2026 - 10:41 AM
By கண்டி நிருபர் ராஜ்
By கண்டி நிருபர் ராஜ்

1935 ஆண்டு தொடங்கப்பட்ட கலஹா ஸ்ரீ இராமகிருஸ்ணா மத்திய கல்லூரி பாடசாலையின் பழைய மாணவர்களின் கிரிக்கெட் சுற்று போட்டி நடைப்பெற்றது.
கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி 1935 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். இப்பாடசாலையின் வரலாற்றை எழுதும்போது, அதன் தோற்றம், ஆரம்பகாலக் கல்விச் செயற்பாடுகள், வளர்ச்சிப் படிநிலைகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் சமூகத்திற்கான பங்களிப்புகள் ஆகியவற்றை உள்ளடங்குகின்றது.
கண்டி மாவட்டத்தின் கலஹா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி, இலங்கையின் மத்திய மாகாணத்தில் இயங்கும் ஒரு அரச பாடசாலையாகும்.
இந்த கிரிக்கெட் சுற்றுபோட்டி கலஹா ரன்தெரு மைதானம் மற்றும் திருவள்ளூவர் வித்தியாலயத்தில் உள்ள மைதானத்தில் விளையாட்டு போட்டி நடைப்பெற்றது.
இந்த விளையாட்டு போட்டி ஏற்பாடு செய்வதன் நோக்கம் பழைய மாணவர்கள் ஒன்று கூடுதல் மற்றும் பழைய ஞாபகங்களை ஏற்ப்படுத்தி கொள்வதுமே இந்த விளையாட்டு போட்டி மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த பழைய மாணவர்களின் செயலாளர் எஸ்.ஜோதிஸ்வரன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரலி கே.நந்தகுமார், ஜே.சதீஸ்குமார், கமலதாசன் பெரிய அண்ணன், கமல் சுபாஹினி முனாஜி ஆகியோர் பங்கு பற்றினார்கள்.
பிரதம அதிதிகள் கலஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சன், பாடசாலை அதிபர், முன்னாள் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
































