Oct 14, 2026 - 11:17 AM

யுவுராஜ் சிங் இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் அதிரடி ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் கிங். 2007 ஆம் ஆண்டு இந்தியா டி20 உலக கிண்ணத்தை வென்றது. 2011 இல் 50 ஓவர் உலக கிண்ணத்தை வென்றது. இந்த இரண்டு கிண்ணங்களையும் இந்திய அணி வெல்ல இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது.
2000 முதல் 2017 வரை இந்திய அணிக்காக விளையாடினார். 304 ஒருநாள் போட்டி, 40 டெஸ்ட் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் இவரை டெல்லி அணி பயிற்சியாளராக அறிவித்துள்ளது. துடுப்பாட்ட பயிற்சியாளருடன், துணை பயிற்சியாளராகவும் செயல்படுவார் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அறிவித்துள்ளது. சமீபத்தில்தான் சவுரவ் கங்குலிலை தலைமை பயிற்சியாளராக நியமித்தது.
இது குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது,
டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் எனது வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கவிருப்பதில் நான் மிகுந்த உற்சாகத்தில் உள்ளேன். இந்த அணியுடன் எனக்கு நீண்டகாலத் தொடர்பு இருப்பதாலும், அதன் உரிமையாளர்களை எனக்கு நன்கு தெரிந்திருப்பதாலும், இது எனக்கு ஒரு சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது.
தாதாவுடன் (கங்குலி) இணைந்து பணியாற்றவும், அதுவும் இம்முறை பயிற்சியாளர்களாக செயல்படவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். பயிற்சியளிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனவே, மிகுந்த திறமை வாய்ந்த இந்த அணியுடன் எனது பணியைத் தொடங்க நான் ஆவலாக உள்ளேன்.
இது எனக்கு ஒரு சுவாரஸ்யமான பயணமாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், அணியின் வெற்றிக்கு எனது பங்களிப்பை வழங்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.
































