Oct 14, 2026 - 12:39 PM

கல்முனை பகுதியைச் சேர்ந்தவரும், சவூதி அரேபியாவில் பணிபுரியச் சென்றவருமான பொறியாளர் அனோஜன் சிவரசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதற்காக உழைத்த சகலருக்கும் எனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனோஜனின் உயிர் வாழும் உரிமையை உறுதி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பைசர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட சகல சட்டத்தரணிகளுக்கும், இலங்கைக்கான சவூதி தூதுவர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நானும் எனது குழுவினரும் எம்மால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் செய்தோம்.
அவரது உயிரைப் காப்பாற்ற முடிந்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இது தொடர்பாக சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றத்திற்கும், மன்னருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
































