Oct 14, 2026 - 01:47 PM

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தி டர்ட்டி பிக்சர்’. இந்தப் படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்த வித்யா பாலன், தனது துணிச்சலான நடிப்பாலும் கவர்ச்சியான தோற்றத்தாலும் ரசிகர்களை வியக்க வைத்தார்.
கவர்ச்சிக்கு மட்டுமல்லாமல், நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர் ஏற்றிருந்த இந்தக் கதாபாத்திரம் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‘தி டர்ட்டி பிக்சர் 2’ உருவாக இருக்கிறது. முதல் பாகத்தில் வித்யா பாலன் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் இந்தப் படத்தில் நடிக்க டிரிப்தி டிம்ரி தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், பல்வேறு காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகியதாகத் தெரிகிறது. இதையடுத்து அவருக்குப் பதிலாக தமன்னா தேர்வாகியுள்ளார்.
ஏற்கெனவே தனது கவர்ச்சியான தோற்றத்தாலும் நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்து வரும் தமன்னா, முதல் பாகத்தில் வித்யா பாலன் ஏற்படுத்திய தாக்கத்தை இரண்டாம் பாகத்தில் ஏற்படுத்த முடியுமா? சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட முதல் படம் ஏற்படுத்திய பரபரப்பை, இந்தப் புதிய படம் மீண்டும் திரையில் நிகழ்த்துமா? என்பதுதான் இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
































