Oct 15, 2026 - 06:50 AM

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பமான 'காவி உடைக்கு நீதி - சுதந்திரத்திற்கான நடைபயண பேரணி இன்று (15) கொழும்பை வந்தடைந்து நிறைவடையவுள்ளது.
கடந்த 10ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகை வளாகத்தில் ஆரம்பமான இந்த நடைபயண பேரணி, கடுகன்னாவை, கேகாலை, வரக்காபொல, நிட்டம்புவ ஆகிய நகரங்களைக் கடந்து நேற்று (14) கடவத்தை நகருடன் நிறைவடைந்தது.
இதற்கமைய, இன்று காலை கடவத்தை நகரத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைபயண பேரணி கொழும்பை நோக்கி வரவுள்ளது.
































