Oct 15, 2026 - 11:57 AM

டிஜிட்டல் கல்வி மற்றும் எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், கொமர்ஷல் வங்கியானது பாணந்துறையிலுள்ள அகமெதி பாலிகா மகா வித்தியாலயத்தில் தனது 200ஆவது STEM வகுப்பறையைத் திறந்து வைத்து, நாட்டின் கல்வித் துறையில் தனது பங்களிப்பின் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த வசதியானது, நாடு முழுவதும் இதுவரை 325,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நவீன மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கற்றலைக் கொண்டு சேர்த்துள்ள நீண்டகாலத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துகிறது. இத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் இப் பாடசாலையானது 1 முதல் 13 ஆம் வகுப்பு வரை 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்களையும், 110 ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. மேலும், இந்த புதிய வசதியானது நவீன பொருளாதாரத்தை வழிநடத்தும் முக்கிய தொழில்நுட்பங்களில் இம்மாணவர்களுக்கு நேரடி செயன்முறை அனுபவத்தை வழங்குகிறது.
புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த வகுப்பறையானது, அதிநவீன ஸ்மார்ட் பலகை (SMART Board) மற்றும்
எழுதுபலகை பொருத்தப்பட்ட விரிவுரை மண்டப நாற்காலிகளுடன், முன்னர் போதிய பயன்பாட்டில் இல்லாதிருந்த ஓர் இடத்தை புதிய கற்றல் சூழலாக மாற்றியமைக்கிறது. இப் பாடசாலையின் அர்ப்பணிப்புமிக்க தகவல் தொழில்நுட்ப (IT) ஆசிரியர் குழாம் இதன் பயன்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் வேளையில், ஆசிரியர்கள் பல்லூடகங்கள் நிறைந்த STEM மற்றும் IT பாடங்களை நடத்துவதற்கும், மாணவர்கள் கூட்டுக் கற்றல், நிரலாக்கம் (உழனiபெ), ஊடாடும் உருவகப்படுத்துதல்கள் மற்றும் டிஜிட்டல் திறன்களைப் பெறுவதற்கும் இவ்வசதி பெரிதும் வழிவகுக்கும். கல்வி மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவிற்கான கொமர்ஷல் வங்கியின் பரந்த, நீண்டகால உறுதிப்பாட்டின் ஒரு அங்கமாகவே இந்த ளுவுநுஆ வகுப்பறைத் திட்டம் அமைகின்றது. வங்கியின் கல்வி சார்ந்த ஆரம்பகட்ட முயற்சிகளிலிருந்து உருவெடுத்த இத்திட்டம், வங்கியின் நூற்றாண்டு விழாவான 2020ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட 100 ஸ்மார்ட் ளுவுநுஆ பாடசாலைகள் திட்டத்தின் மூலம் கணிசமாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
அத்திட்டத்தின் கீழ் 100 பாடசாலை வகுப்பறைகள் வங்கியினால் புதுப்பிக்கப்பட்டு, தளபாடங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டு, டிஜிட்டல் கற்றல் உள்ளடக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அவற்றினை திறம்படப் பயன்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
பாடசாலை மட்டத்திலான டிஜிட்டல் கல்வியில் வங்கியின் பரந்த முதலீட்டின் கீழ், நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 500,000க்கும் அதிகமான மாணவர்கள் பலனடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கல்வியில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து கற்பிப்பதற்கும், கற்பதற்கும் பிரத்தியேக சூழலை வழங்கி, இம்முயற்சிக்கு ளுவுநுஆ வகுப்பறைகள் மேலும் வலுச்சேர்த்துள்ளன.
புதிய வசதியானது மாணவர்கள் மிகவும் பங்குபெறும் முறையிலான கற்றல் அனுபவத்தைப் பெறுவதற்கும், தங்களது கல்வியில் தொழில்நுட்பத்தைப் பெருமளவில் பயன்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கும் என அகமெதி பாலிகா மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு. அனுராத வெலிகட தெரிவித்தார். இவ்வகுப்பறையானது நமது மாணவர்களுக்கு கற்றலை மேலும் பங்குபெறும் தன்மையுடையதாகவும், நடைமுறைச் சாத்தியமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாற்றக்கூடிய ஒரு மதிப்புமிக்க இடத்தை வழங்குகிறது. குறிப்பாக, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும், தங்களது எதிர்காலக் கல்வி மற்றும் தொழில்வாழ்க்கைக்கு அவசியமான திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உதவும் வசதிகளை நமது மாணவிகள் பெறுகின்றமை குறித்து நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம், என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக்
கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான Top 1000 World Banks தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது.
Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும்
மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது.
மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி
இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
































