Oct 15, 2026 - 11:49 AM

இலங்கையின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான யூரோ மோட்டார்ஸ் (Euro Motors), தனது நாடளாவிய வாகன விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விநியோகஸ்தர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்களை உத்தியோகபூர்வமாக நியமித்து கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்றை அண்மையில் நடத்தியது.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் ‘The Blue’ மண்டபத்தில், ‘Beyond the Drive’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, நிறுவனத்தின் நாடளாவிய வலையமைப்பு விரிவாக்க நடவடிக்கைகளில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இந்நடவடிக்கையின் மூலம் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள வாடிக்கையாளர்கள், வாகனக் கொள்வனவு, பராமரிப்பு, திருத்தப் பணிகள், அசல் உதிரிப்பாகங்கள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளைத் தமது வசிப்பிடங்களுக்கு அருகிலேயே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
வலையமைப்பு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, வாகனக் காட்சியகங்கள், விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாக வசதிகளை ஒருங்கிணைத்து வழங்கும் 3S விநியோகஸ்தர்கள், அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் புதிய வர்த்தகப் பங்காளர்களை யூரோ மோட்டார்ஸ் நியமித்துள்ளது.
இந்த வலையமைப்பின் ஊடாக வாடிக்கையாளர்கள் தமது பிரதேசங்களிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட யூரோ மோட்டார்ஸ் விற்பனை மற்றும் சேவை நிலையங்களை அணுகி, வாகனக் கொள்வனவு முதல் பராமரிப்பு மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் வரையான தேவைகளை இலகுவாகப் பூர்த்திசெய்துகொள்ள முடியும்.
யூரோ மோட்டார்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், வாகனமொன்றை வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பதுடன் நிறுவனத்தின் பொறுப்பு நிறைவடைந்துவிடுவதில்லை. வாகனத்தைப் பயன்படுத்தும் காலம் முழுவதும் வாடிக்கையாளருக்குத் தேவையான சேவைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவதே நிறுவனத்தின் நோக்கமாகும்.
பயணிகள் வாகனங்கள், SUV ரக வாகனங்கள், மின்சார வாகனங்கள், டபள் கெப் வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் எனத் தனது வாகன வகைகளை விரிவுபடுத்திவரும் நிறுவனம், அவற்றுக்குத் தேவையான விற்பனைக்குப் பிந்தைய சேவை வசதிகளையும் அதற்கேற்ப மேம்படுத்தி வருகின்றது.
இதன் மூலம் நாடு முழுவதுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பச் சேவைகள், அசல் உதிரிப்பாகங்கள், வாகனப் பராமரிப்பு, திருத்தப் பணிகள் மற்றும் உத்தரவாதம் தொடர்பான உதவிகளை அருகிலுள்ள சேவை நிலையங்களிலேயே பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இது தொடர்பில் யூரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ரவீந்திர சேனாரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,
“எமது நோக்கம் வாகன வகைகளை விரிவுபடுத்துவதுடன் மாத்திரம் நின்றுவிடுவதல்ல. வாடிக்கையாளர்கள் வாகனங்களைப் பயன்படுத்தும் காலம் முழுவதும் அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் சேவைகளையும் வழங்கக்கூடிய வலுவான கட்டமைப்பை உருவாக்குவதே எமது முக்கிய இலக்காகும்.
நாடு முழுவதும் வாகனக் காட்சியகங்கள், 3S விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைப் பங்காளர்களை நியமிப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் தாங்கள் வசிக்கும் அல்லது தொழில் புரியும் இடங்களுக்கு அருகிலேயே எமது வாகனங்களையும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளையும் இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கின்றோம்.
இந்த வலையமைப்பு, எமது வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகப் பங்காளர்களுடன் நீண்டகால உறவைப் பேணுவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது” என்றார்.
யூரோ மோட்டார்ஸின் இந்த மூன்று பிரிவுகளைக் கொண்ட வலையமைப்பு, வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
வாகனக் காட்சியகங்கள், புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்ய விரும்புவோருக்கு வாகனங்களை நேரில் பார்வையிடவும் அவற்றின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பளிக்கின்றன.
3S விநியோகஸ்தர்கள், வாகன விற்பனை, உதிரிப்பாகங்கள் மற்றும் சேவை வசதிகளை ஒரே இடத்தில் வழங்குகின்றனர். அதேவேளை, அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்கள், வழக்கமான வாகனப் பராமரிப்பு, திருத்தப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வாடிக்கையாளர்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கின்றனர்.
வாகன உற்பத்தியாளர்களால் பரிந்துரைக்கப்படும் பராமரிப்பு அட்டவணைகளுக்கு ஏற்ப வாகனங்களை உரிய காலத்தில் பராமரிப்பதற்கும் இந்த அங்கீகரிக்கப்பட்ட சேவை வலையமைப்பு முக்கிய பங்காற்றுகின்றது.
































