Nov 25, 2026 - 05:54 PM

வியட்னாமிற்கு உங்களின் அடுத்த பிரயாணத்தைத் திட்டமிடுகின்றீர்களா? இலங்கையின் பிரயாணிகளுக்கு விசேட சலுகைகளுடன் விறுவிறுப்பான மூன்று நாள் Black Friday bonanza ஐ Vietjet வழங்குகிறது. இதில் ஒரு வழிப் பிரயாணத்திற்கு USD188 இலிருந்தான Eco டிக்கட்கள் (வரிகள் மற்றும் கட்டணங்கள் அடங்கலாக) அடங்கியுள்ளதுடன், Deluxe கட்டணங்களில் 20% வரை விலைக்கழிவையும் வழங்குகிறது. முதன்முறையாக வியட்னாமிற்கு பயணிக்கின்றீர்களாயின் அல்லது மீண்டும் பயணிக்கின்றீர்களாயின், நாட்டின் முக்கிய பகுதிகளைக் கண்டு களிப்பதற்கு Vietjet
இடமிருந்து சிறந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தற்போது முதல் 2026 நவம்பர் 27 ஆம் திகதி இரவு 9:30 மணி வரை (இலங்கை நேரப்படி), கொழும்பு - Ho Chi Minh, ஹனோய் மற்றும் மாலைதீவு ஆகிய இடங்களுடன் இணைக்கும் விமானப் பாதைகளுக்கான இவ் விசேட சலுகை விலை Eco பயணச்சீட்டுகளைப் பயணிகள் பெற்றுக்கொள்ள முடியும். இந்தச் சலுகை, www.vietjetair.com ஊடாக அல்லது Vietjet Air app ஊடாக கிடைப்பதுடன், 2027 ஜனவரி 4 முதல் மே 31 வரையான காலப்பகுதிக்கு பயணிக்கலாம். (பயணிக்கும் வீதிகள், ஓதுக்கீடு செய்யப்பட்ட தினங்கள்
போன்றவற்றைப் பொறுத்து பிரயாண திகதிகள் மாறுபடலாம்).
Vietjet நிறுவனத்தின் Deluxe வகுப்புப் பயணச்சீட்டுக் கட்டணங்களுக்கான விசேட சேமிப்புச் சலுகைகளுடன் கொண்டாடுவதற்கு மேலும் பல விடயங்கள் உள்ளன! பயணிகள் FRIDAY20 என்ற Promo code ஐப் பயன்படுத்தி வியட்நாம் உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 20% கழிவையும், FRIDAY10 என்ற குறியீட்டைப் பயன்படுத்திச் சர்வதேச விமானப் பயணங்களுக்கு 10% கழிவையும் பெற்றுக்கொள்ள முடியும். இவ் விசேட சலுகைகளைப் பெற்றுக்கொள்ள, Vietjet இணையத்தளம் அல்லது கையடக்கத் app ஊடாகப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போது பொருத்தமான குறியீட்டை உள்ளிடவும்.
கொழும்பு - Ho Chi Minh City விமான சேவைகள் வாராந்தம் 3 பயணங்களை முன்னெடுப்பதுடன், மாலைதீவுக்கான சேவை 2026 டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து 2027 பெப்ரவரி மாதம் ஹனோய் சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கிடையே நேரடி இணைப்புகளை வழங்குவதுடன், ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா இடையே மேலும் பல பகுதிகளுக்கு பயணம் செய்வதற்கான வாய்ப்புகளையும் வழங்குகின்றது.
விறுவிறுப்பான கட்டணங்கள் மற்றும் சௌகரியமான இணைப்புகளுடன், உலகின் பல பாகங்களிலும் வியட்னாமிற்கு பயணிகளை வரவேற்பதற்கும், மனம்மறவாத நினைவுகளை ஏற்படுத்தவும் Vietjet எதிர்பார்க்கின்றது. இந்த Black Friday டீல்களை பெற்று, உங்களின் அடுத்த மனம் மறவாத பயணத்தை திட்டமிடுங்கள்!
Vietjet பற்றி
புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து
நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது.
Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச்
சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம் எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com

































